தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.1.12

லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு அடுத்தடுத்து புற்றுநோய்: அமெரிக்க சதியா?

காரகஸ்,ஜன1-லத்தீன் அமெரிக்கநாடுகளைச் சேர்ந்தத லைவர்களுக்குஅடுத்தடுத்துபுற்றுநோய்ஏற்படுவதற்கு அமெரிக்காவின்சதியேகாரணம்எனவெனிசுலாஅதிபர் சாவேஸ்பகிரங்கமாககுற்றஞ்சாட்டிஇருக்கிறார்.அமெ ரிக்காவின் தென் பகுதியில் உள்ள வெனி சுலா, பிரேசி ல், அர்ஜென்டிணா, பராகுவா,சிலி உள்ளி ட்ட 20 நாடுக ள் லத்தீன்
அமெரிக்க நாடுகள் என்றுஅழைக்கப்படுகின்
றன. இந்த நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளில் இடதுசாரி கொள்கைகளை கொண்ட தலைவர்களே தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் பதவி வகித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் வெனிசுலா அதிபர் ஹுகோ சாவேஸ், பராகுவே அதிபர் பெர்னாண்டோ லுகோ, பிரேசில் அதிபர் டில்மா ரூசெப், முன்னாள் அதிபர் லுயிஸ் இனாசியோ, பொலிவியா அதிபர் ஈவோ மொராலெஸ் ஆகியோர் சமீபகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அர்ஜென்டிணா பெண் அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டசும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்த வாரம் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.
லத்தின் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அதிபர்களுக்கு அடுத்தடுத்து இதுபோன்று புற்று நோய் ஏற்படுவதன் பின்னணியில் அமெரிக்காவின் சதி இருப்பதாக வெனிசுலா அதிபர் ஹுகோ சாவேஸ் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி இருக்கிறார். சமீபத்தில், புற்றுநோய் சிகிச்சை பெற்ற அவர், ராணுவ முகாமில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், "புற்று நோயை பரப்பும் தொழில் நுட்பத்தை அவர்கள் கண்டு பிடித்திருப்பது வித்தியாசமானது அல்ல. இதை, கடந்த 50 ஆண்டுகளாகவே நாம் பார்த்து வருகிறோம். எனினும், எந்த ஒருவரையும் தனிப்பட்டு நான் குற்றஞ்சாட்டவில்லை. என்னுடைய பேச்சு சுதந்திரத்தை அடிப்படையாக கொண்டு இந்த புகாரை தெரிவிக்கிறேன்" என்றார்.
அதே நேரத்தில், தன்னுடைய குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் 1940-ம் ஆண்டுகளில் 2500 கவுதமாலாவாசிகளுக்கு நோய்க் கிருமியை அமெரிக்க டாக்டர்கள் பரப்பியதை நினைவு கூறுமாறும் தெரிவித்தார். மேலும், பொலிவியா அதிபர் ஈவா, ஈகுவடார் அதிபர் ரபேல் ஆகிய இருவரும் கவனமாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏற்கனவே, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி புஷ்சை 'பிசாசு' என்றும் தற்போதைய ஜனாதிபதி ஒபாமாவை 'கோமாளி' என்றும் வெனிசுலா அதிபர் சாவேஸ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: