தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.1.12

மூடர் இருவரால் ஏழு வயது சிறுமி நர பலி கொடுக்கப்பட்டார்

இந்தியாவில் விளைச்சல் நல்லபடியாக பிறக்க வேண்டும் என்பதற்காக ஏழு வயது சிறுமி ஒருவர் காட்டுக்குள் வைத் து நர பலி கொடுக்கப்பட்ட மூடச் செயல் நடைபெற்றுள்ளது. இந்த வருடம் விவசாயம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக சிறுமியை கடத்திச் சென்று கொன்று தலை யை துண்டித்து, ஈரலை கடவுளுக்கு படைத்துள்ளனர். இந்த ச் சம்பவத்தில் இரண்டு மூடர்கள் கைது செய்யப்பட்டுள்ள
னர். மாவோ குழுவினர்
கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு வங்கம் சதீஸ்கர் மாநிலத்திலேயே இது நடைபெற்றுள்ளமை இந்திய மாவேயிஸ்டுக்களின் கொள்கைகளின் மீது விழுந்த செருப்படியாக உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இந்தப் பிள்ளை கடத்தப்பட்டுள்ளது, பெற்றோர் முறையிட்ட ஒரு வாரத்தில் தலை வெட்டி படையல் நடைபெற்றுள்ளது. சென்ற ஆண்டும் இரண்டு பிள்ளைகளை கொன்று ஆலயத்தில் போட்டிருந்தனர். இந்தியா மூட நம்பிக்கைகள், ஜாதிக் கொடுமைகள், பார்ப்பனிய ஆதிக்கம், அடிமைகளாக மக்களை நடாத்துதல் போன்ற பெரும் தவறுகளை தன்னகத்தே இன்னமும் கொண்டிருப்பது மறைக்க முடியாத உண்மையாகும். இதுபோன்ற மூட நம்பிக்கைகள் அற்ற சமுதாயமாக இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடுகள் உருவாகக் கூடாது என்பதிலும் இந்தியா கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறதா என்ற சந்தேகமும் பலரிடையே உள்ளது.

0 கருத்துகள்: