தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணை கப்பல் ஒன் று ஐக்கிய அரபுநாடுகளில் ஒன்றான புஜாய்ரா துறைமுகத்து க்கு வந்தது. அதில் 105 ஊழியர்கள் இருந்தனர். அந்த கப்பலி ல் பழுது சரி செய்யும் பணிகள் நடந்தன. அப்போது, திடீரென எண்ணை டேங்கர் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி இறந்தனர்.2 பேரை காணவில் லை. ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் புஜாய்ரா ஆஸ்ப த்திரியில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து நடந்த
கப்பல் எண்ணையோ அல்லது கியாஸ் எதுவும் ஏற்றிச்செல்லவில்லை. அதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து நடந்த கப்பலில் இருந்த 24 ஊழியர்கள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் கப்பலில் தங்கியுள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக