தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.12.11

நடுக்கடலில் நின்ற சரக்கு கப்பலை புயல் கரைக்கு இழுத்து வந்தது: மெரீனாவில் தரை தட்டி நிற்கிறது

சென்னை, டிச. 31- தானே புயல் பலத்த சேதத்தை ஏற்ப டுத்தும் என்பதை முன்கூட்டியே அறிந்து சென்னை து றைமுகத்திற்கு வந்திருந்த 20 சரக்கு கப்பல்களை அதி காரிகள் நேற்று நடுக்கடலுக்கு திருப்பி அனுப்பினர். 
இதன்படி சரக்கு ஏற்றி வந்த கப்பல்களும், சரக்குகளை இறங்கி நின்ற கப்பல்களும் நடுக்கடலில் நங்கூரம் இ றக்கி
நிறுத்தப்பட்டு இருந்தது.  இன்று காலை புயல் காற்று பலமாக வீசியதால் நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சரக்கு கப்பல் அலையில் மிதந்து கரைக்கு இழுத்து வரப்பட்டது. மெரீனா கடலில் நேப்பியர் பாலம் அருகே உள்ள மதகு பகுதியில் அந்த கப்பல் தரை தட்டி நிற்கிறது. 

 
எம்.ஜி.ஆர். சமாதி, அண்ணா சமாதிக்கு வந்த பொதுமக்கள் கப்பல் தரை தட்டி நிற்பதை கூட்டம் கூட்டமாக நின்று பார்த்து செல்கின்றனர். காற்று அதிகம் வீசுவதால் கப்பலை கடலுக்குள் இழுக்க முடியவில்லை. இதனால் அங்கேயே கப்பல் நிற்கிறது. கடல் சீற்றம் தணிந்த பிறகே கப்பலை மீட்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்: