தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.7.12

ஹெல்மெட் போடாதவர்களுக்கு கேரளாவில் புதுமையான தண்டனை


திருவனந்தபுரம், ஜூலை 1-பைக்குகளில் ஹெல்மெட் அணியா மல் செல்பவர்களுக்கு காவல்துறையினர் இம்போசிஷன் தண் டனை வழங்குவது நல்ல பலனைத் தரும் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கேரளாவில் சாலை விபத்துகளில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பலி யாவது அதிகரித்து வரு கிறது. ஹெல்மெட் அணியாமல் செல்ப வர்கள் தான் அதிக அளவில் பலியாகின்ற னர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொல்லம் நகரத்தில் ஹெல்மெட் அணி யாமல் சென்றவர்களை யும், செல்போனில் பேசி யபடி வாகனம் ஓட்டி யவர்களையும் பிடித்து நூதனமான தண்டனை அளித்தனர்.

இனி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டமாட்டேன், செல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டமாட் டேன் என்று 200 தடவை நோட்புக்கில் இம்போசிஷன் எழுத வேண்டும். இதுதான் அவர்களுக்கு காவல் துறையினர் அளித்த நூதனதண்டனை. சாலையில் நின்று கொண்டே இம்போ சிஷன் எழுத வேண்டும். இதற்காக காவல்துறை யினர் கொல்லம் நகரத் தில் ஆங்காங்கே நோட்டு புத்தகத்துடன் தயாராக இருப்பார்கள்.
பொது இடத்தில் அனைவரும் பார்க்க, இந்த இம்போசிஷனை எழுதவேண்டும். காவல் துறையினரின் இந்த நூதன தண்டனைக்கு நல்ல பலன் கிடைத்தது. இம்போசிஷன் எழுத வெட்கப்பட்டு பெரும் பாலானோர் ஹெல் மெட் அணிய தொடங் கினார்கள். இந்நிலையில் காவல்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து திருச்சூரை சேர்ந்த டாக்டர் லாசர் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் வழக்கு தொடர்ந் தார். இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) மஞ் சுளா செல்லூர், நீதிபதி ஷபீக் ஆகியோர் அடங் கிய அமர்வு, இது குறித்து ஜூன் 30ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க கோரி கேரள அரசுக்கு தாக்கீது அனுப்பியது. இதை யடுத்து கேரள அரசு தரப்பில் அரசு வழக்கறி ஞர் விஜயராகவன் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில், கொல்லம் நகரத்தில் போக்குவரத்து விதிகள் தொடர்பாக விழிப்பு ணர்வு ஏற்படுத்துவதற் காகத் தான் காவல் துறையினர் இம்போசி ஷன் முறையை கொண்டு வந்தனர். தண்டனைக் காக அதை செயல் படுத்தவில்லை என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் கொல்லம் காவல் துறையினரின் நடவடிக்கையைப் பாராட்டினர். இம்போ சிஷன் நடவடிக்கைக்கு நல்லபலன்கிடைத் திருப்பதால் கேரளா முழுவதும்இந்த முறையை அமல்படுத் தலாம்.
பொதுமக்களிடையே போக்குவரத்து தொடர் பான விழிப்புணர்வை ஏற்படுத்த இது போன்ற நல்ல நடவடிக்கை களை ஊக்குவிக்க வேண்டியது அவசியமா கும்.எனவே இது போன்ற தற்காலிக நடவடிக்கைகளை தடுக்கவேண்டிய தில்லை. போக்குவரத்து விழிப்புணர்வு நடவடிக் கைகள் குறித்து காவல் துறையினர் முன்கூட் டியே அறிவிப்பு செய்வ தால் இதை தண்ட னையாக கருதவேண் டியதில்லை. எனவே இந்த இம்போசிஷன் முறையை கேரளா முழுவதும் ஒரு நிரந்தர நடவடிக்கையாக கொண்டுவருவதில் தவறில்லை என்று கூறிய நீதிபதிகள், டாக் டர் லாசர் தாக்கல் செய்த மனுவை தள்ளு படி செய்து உத்தரவிட் டன

0 கருத்துகள்: