தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.4.12

உஸாமாவை கொலைச் செய்தது போல என்னையும் கொலைச் செய்துபார்! – அமெரிக்காவிற்கு ஹாஃபிஸ் ஸஈத் சவால்!


இஸ்லாமாபாத்:அல்காயிதா தலைவர் உஸாமா பின் லேடனை கொலை செய்தது போல தனக்கு எதிராகவும் ராணுவ நடவடிக்கைக்கு தயாராக பேராசிரியர் ஹாஃபிஸ் ஸஈத் அமெரிக்காவிற்கு சவால் விடுத்துள்ளார். தாக்குதல் நடத்தும்பொழுது அமெரிக்காவிற்கு எங்கு இருக்கிறேன் என்பதை நானே அறிவிக்கிறேன் என்றும் ஹாஃபிஸ் கூறியுள்ளார். ராவல்பிண்டியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அமெரிக்காவை கடுமையாக சாடிய பேராசிரியர் ஹாஃபிஸ் ஸஈத் இந்த சவாலை விடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறியது:அமெரிக்காவிற்கு என்னை குறித்து எதுவும் தெரியாதது துரதிர்ஷடவசமானது. நான் பாகிஸ்தானில் செயல்படும் ஒரு நபர். குகைகளிலோ, மலை இடுக்குகளிலோ வசிப்பவர்களை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்குத்தான் இவ்வாறு பரிசுகளை அறிவிப்பார்கள். நேட்டோ ராணுவத்திற்கான சரக்குகளை கொண்டுசெல்லும் நடவடிக்கையை நான் எதிர்த்ததால் அமெரிக்காவிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சரக்குகளை நேட்டோ படையினருக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்கினால் அதற்கான எதிர் விளைவுகளை சந்திக்கவேண்டி வரும் என்ற தனது முடிவில் மாற்றமில்லை. அமெரிக்கா எனது தலைக்கு அறிவித்துள்ள ஒரு கோடி டாலர் பரிசை அளிக்குமானால் எங்கே உள்ளேன் என்பதை நானே நேரடியாக அமெரிக்காவிடம் தெரிவிக்கிறேன். இந்த பணத்தை துயரத்தை அனுபவித்து வரும் பலுசிஸ்தான் மக்களின் நல்வாழ்விற்கு உபயோகப்படுத்தலாம்’ என்று பேராசிரியர் ஹாஃபிஸ் ஸஈத் கூறினார்.

0 கருத்துகள்: