தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.4.12

இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய டெஹல்கா வழக்கு: வரும் 27ம் தேதி தீர்ப்பு

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டெஹல்கா ஊழல் வழக்கில் வருகிற 27ம் தேதி  டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.கடந்த 2001ல் பாரதிய ஜனதாக் கட்சித் தலைவராக பங்காரு லஷ்மண் பதவியில் இருந்தார்.அப்போது, இந்தியாவின் பிரபல ஊடகமான டெஹல்காவைச் சேர்ந்தவர்கள், பிரிட்டனை சேர்ந்த ஆயுத கம்பெனி பிரதிநிதிகளை போல் லஷ்மணை சந்தித்து, தங்கள் நிறுவன பொருட்களை ராணுவத்துக்கு வழங்க பாதுகாப்புஅமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யும்படி
கோரிக்கை விடுத்தனர்.



அதற்காக அவரிடம் லஞ்சம் கொடுத்தனர். அதை லஷ்மண் வாங்கினார். இதை அனைத்தையும் கமெரா மூலம் ரகசியமாக பதிவு செய்த டெஹல்கா குழு, 2001 மார்ச் 13ம் திகதி அதை வெளியிட்டு, நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, பாஜக தலைவர் பதவியை பங்காரு லஷ்மண் ராஜினாமா செய்தார்.
 

பின்பு லஷ்மண் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 11 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.


நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கன்வால் ஜித் அரோரா பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த வழக்கில் ஏராளமான ஆவணங்களும், வாதங்களும் முன் வைக்கப்பட்டுள்ளன.


அவற்றை எல்லாம் ஆராய்ந்து தீர்ப்பு அளிக்க 15 நாட்கள் போதாது. எனவே, ஏப்ரல் 27ம் திகதி தீர்ப்பு அளிக்கப்படும்’’ என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

0 கருத்துகள்: