தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.4.12

நியூயார்க் நகருக்கு விரைவில் வருகிறது அல்கொய்தா. இணையதள போஸ்டரால் பரபரப்பு.


புதிய சினிமாக்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்னர், விரைவில் வெளிவருகிறது என்று போஸ்டர் வெளியிடுகின்றனர். டிவி, தியேட்டர்களிலும் டிரெய்லர் வெளியிடுகின்றனர். இந்நிலையில், அல் கய்தா போராளிகள் கம்மிங் சூன் என்ற வாசகங்களுடன் போலி சினிமா போஸ்டர் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நியூயார்க் நகரின்இரட்டை கோபுரங்கள் மீது அல் கய்தா போரளிகள்கள் கடந்த 2011ம் ஆண்டு

செப்டம்பர் 11ம் தேதி விமானங்களை மோதி பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் இரட்டை கோபுரம் தரைமட்டமானது. இந்த தாக்குதலில் 3000க்கும் அதிகமானோர் பரிதாபமாக பலியாயினர். இதையடுத்து அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கடும் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. பாகிஸ்தான் பதுங்கி இருந்த அல் கய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை, அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர்.



இந்நிலையில், நியூயார்க் நகருக்கு அல் கய்தா போராளிகள்கள் விரைவில் வருகின்றனர் என்ற வாசங்களுடன் கிராப்பிக்சில் வடிவமைக்கப்பட்ட வண்ண போஸ்டர் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூயார்க் போலீஸ் செய்தித் தொடர்பாளர் பால் பிரவுனி கூறுகையில், நகருக்கு எந்த ஆபத்தும் இதுவரை இல்லை. நகருக்குள் அல் கய்தா போராளிகள்கள் ஊடுருவ போவதற்கான எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றனர். அவர் மேலும் கூறுகையில், அரபு மொழியை சேர்ந்த வெளிநாட்டு இணையதளம் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது. ஓவியங்கள் , வடிவமைப்பு பகுதியில் இந்த போஸ்டர் இடம்பெற்றுள்ளது. இந்த இணையதளத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதனால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றார்.

0 கருத்துகள்: