தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.4.12

கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டில் 10 ரூபாய் பாக்கெட் மளிகை பொருட்களுக்கு பெரும் வரவேற்பு



திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் (டி.யு.சி.எ ஸ்.) சார்பில் நடத்தப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள் பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று ள்ளன. குறைந்த விலையில் தரமான பொருட்கள் வி ற்பனை செய்யப்படுவதால் மக்கள் அங்கு விரும்பி செல்கிறார்கள். ஏழை, நடுத்தர மக்கள் வசதிக்காக த ற போது 10 ரூபாய்
பாக்கெட்டுக்களில் மளிகை பொருட்களை அடைத்து விற் கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள டி.யு.சி.எஸ். காமதேனு சூப்பர் மார்க்கெட்டில் 10 ரூபாய் கடையை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சூப்பர் மார்க்கெட்டுக்கு 100 ரூபாய் எடுத்து சென்றால் தாங்கள் விரும்பும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் 10 பாக்கெட்டுகளை வாங்கி செல்லலாம்.

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசி பருப்பு, கடலை பருப்பு, வறுகடலை, மிளகாய் போன்றவை 150 கிராம் எடை கொண்டவையாகும். இவற்றின் ஒவ்வொரு பாக்கெட்டின் விலையும் ரூ.10 ஆகும். 200 கிராம் புளி இதில் அடங்கும்.

இதேபோல கடுகு, சீரகம், பூண்டு, மிளகு, வெந்தயம், பிஸ்கட், சாக்லெட், ரவா, மைதா, ஆட்டா மற்றும் எண்ணையும் 10 ரூபாய் பாக்கெட்டுகளாக விற்கப்படுகிறது. அன்றாடம் சமையலுக்கு தேவைப்படும் அனைத்து மளிகை பொருட்களும் 10 ரூபாய் பாக்கெட்டில் கிடைக்கிறது.

இந்த விற்பனை திட்டத்திற்கு உள்ள வரவேற்பை பொறுத்து வெங்காயம், உருளை, தேங்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறி வகைகளும், 10 ரூபாய் பாக்கெட்டில் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்த செலவில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி செல்லமுடியும்.

இந்த சூப்பர் மார்க்கெட்டையொட்டி உள்ள கூட்டுறவு புதிய மருந்து கடையையும் அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார். சென்னையில் இது 7-வது கூட்டுறவு மருந்து கடையாகும். ஏற்கனவே ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகர், அசோக் நகர், கீழ்ப்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.

காமதேனு கூட்டுறவு மருந்து கடைகளில் 17 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வடசென்னை பகுதியில் பெரம்பூர், திரு.வி.க.நகர், மூலக்கடை, கொளத்தூர், மாதவரம் பகுதியிலும் கூட்டுறவு மருந்து கடைகளை திறக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஒக்கியம் துரைப்பாக்கத்தில் உள்ள தலைமை செயலக பணியாளர்கள் காலனியில் புதிய சூப்பர் மார்க்கெட்டை அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று திறந்து வைத்தார்.

ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று டி.யு.சி.எஸ். சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது. விரைவில் அங்கு காய்கறிகள், பழங்கள், மருந்து விற்பனையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கந்தன் எம்.எல்.ஏ. தனது தொகுதியில் கூட்டுறவு சூப்பர் மார்க்கெட், மருந்து கடைகளை திறக்க 4 கட்டிடங்கள் தருவதாகவும் அதற்கு வாடகை எதுவும் வேண்டாம் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் டி.யு.சி.எஸ். தனி அதிகாரி ஆர். ஜி. சக்தி சரவணன், அதிகாரிகள் ஜெயம்பாண்டியன், கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: