தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.4.12

அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் - பாகிஸ்தான் தீர்மானம்!


பாகிஸ்தானில் நேட்டோ படைகள் நடத்திய தாக்குத லில் 24 பாகிஸ்தான் வீரர்கள் பலியானதற்கு அமெரி க்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டு உள்ளது. ஆளில்லா உளவு விமானங் கள் மூலம் நடத்தப்படும் தாக்குதலை அமெரிக்கா உ டனடியாகநிறுத்த வேண்டும் என்றும் அது கோரியுள் ளது. கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் அபோ ட்டாபாத் நகரில் அல்காயிதா தலைவர் ஒசாமா பின் லேடனைக் கொன்றதாக அமெரிக்கா
அறிவித்தது. அ தன் பின்னர் ஆளில்லா உளவு விமானங்கள்எனப்படும் ட்ரோன் விமானங்கள் மூலம் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் என்ற பெயரில் அமெரிக்கா தொடர்த்தாக்குதல் நடத்தி வருகிறது. பொதுமக்களும் ராணுவ வீரர்களும் இந்த தாக்குதலில் பலியாயினர். அனுமதி இல்லாமல் அத்துமீறி தன்னிச்சையாக அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் பரிதாபமாக இறந்தனர். இதனால் பாகிஸ்தான்  அமெரிக்கா உறவில் பெரும் விரிசல்ஏற்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் நல்லுறவை ஏற்படுத்தஅமெரிக்க வெளியுறவுத் துறை முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது

பாகிஸ்தான் நாடாளுமன்றம் நேற்று கூடியபோது, பாகிஸ்தான் பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுமம் அளித்திருந்த 14 பரிந்துரைகள்குறித்து காரசாரமாக விவாதிக்க்ப்பட்டது. பின்னர், அமெரிக்கா அத்துமீறி டிரோன்கள் மூலம் நடத்தும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். நேட்டோபடைகள் தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் பலியானதற்கு அமெரிக்கா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

மேலும், காஷ்மீர் பிரச்னை தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து சுமுக பேச்சு நடத்த வேண்டும். இரு தரப்பினரும் மதிக்கும் வண்ணம், பயனுள்ள வகையில் அந்தபேச்சு அமைய வேண்டும் என்றும் இந்தியாவுடன் அமெரிக்கா அணுசக்தி தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதேபோல் பாகிஸ்தானுக்கும் அணுசக்தி தொடர்பான உதவிகளை அமெரிக்காவும் மற்றநாடுகளும் செய்ய வேண்டும். என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இத்தீர்மானங்களை செயற்படுத்த முழு முயற்சி எடுக்கப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் கிலானி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: