தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.4.12

சீக்கியரை அவமானப்படுத்திய அமெரிக்க கம்பெனிக்கு 75 ஆயிரம் டாலர் அபராதம்.


சீக்கியராக மாறியவரை அவமதித்த அமெரிக்க நிறுவனம், 75 ஆயிரம் டாலர் நஷ்ட ஈடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.வாஷிங்டனில், ஈவ்ரெட் பகுதியில் உள்ள ஆட்டோ சோன் நிறுவனத்தில் கடந்த, 2009ம் ஆண்டு வேலை பார்த்தவர் பிராங்க் மகோனி,24. சீக்கியராக மதம் மாறிய மகோனி, தலைப்பாகை அணியவும், சிறிய கத்தி வைத்துக் கொள்ளவும் இந்த நிறுவனம் அனுமதிக்கவில்லை.
அதுமட்டுமல்லாது, இவரை அல்குவைதா இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் தீவிரவாதி என்றும் நிர்வாகம் அவமதித்து வந்தது. இவர் தாடி வைத்திருந்த காரணத்தால் இவருடைய பதவி உயர்வும் ரத்து செய்யப்பட்டது.பாகுபாடற்ற வேலைவாய்ப்பு கமிஷனிடம் இது குறித்து, மகோனி புகார் தெரிவித்தார்.
இந்த கமிஷனின் உதவியுடன், ஆட்டோ சோன் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பாஸ்டன் நகர கோர்ட், மகோனியை மத ரீதியான பாகுபாட்டுடன் நடத்தியதற்காக, 75 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

0 கருத்துகள்: