தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.4.12

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் மிருகத்தனமாய் தாக்கப்பட்ட 11 வயதுச் சிறுவன்


பெத்லஹேம்: கடந்த வெள்ளிக்கிழமை (13.04.2012) தெற்கு பெத்லஹேம் பிரதேசத்தின் மஆஸரா கிராமத்தில் பலஸ்தீன் கைதிகளுக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் வாராந்த அமைதிப் பேரணி இடம்பெற்றது.இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் ஆக்கிரமிப்புச் சிறைச்சாலைகளில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுவருகின்றன.  தொடர்ச்சியான சித்திரவதை, தனிமைச் சிறை, உறவினர்களைச் சந்திக்க வருடக்கணக்காய் அனுமதி மறுப்பு என்பன அவற்றுள்
சிலவாகும். பலஸ்தீன் கைதிகளுக்கு எதிரான இத்தகைய வன்கொடுமைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் தமது சாத்வீகப் போராட்டம் மூலம் எதிர்ப்புத் தெரிவித்துவரும் பலஸ்தீன் கைதிகளின் கோரிக்கைகள் நியாயமானவையே என்ற செய்தியை வெளி உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் அமைந்த மேற்படி அமைதிப் பேரணியை இடைமறித்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டது.

இதன்போது, அமைதிப் பேரணியில் கலந்துகொண்ட 11 வயதான உபாதா ப்ரீஜியாஹ் எனும் சிறுவன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் மிருகத்தனமான தாக்குதலுக்கு இலக்கானான்.

கடுமையான காயங்களோடு உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உபாதாவின் உடல்நிலை தற்போது படிப்படியாகத் தேறிவருகிறது என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

0 கருத்துகள்: