தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.4.12

70,000 நைஜீரிய குழந்தைகளுக்கு எய்ட்ஸ். ஆய்வில் அதிர்ச்சி தகவல்.

நைஜிரீயாவில் புதிதாக பிறந்த 70 ஆயிரத்திற்கும் மே ற்பட்ட குழந்தைகள் எச்.ஐ.வி.யுடன் பிறந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடா ன நைஜிரீயா, எண்ணெய் வளம்மிக்க நாடுகளுள் ஒ ன்று.இந்நாட்டில் சமீபத்தில் தேசிய எய்ட்ஸ் கட்டுப் பாட்டு மையம் நடத்திய ஆய்வில் தென்கிழக்கு மாகா ணங்களான ஒகூன், ஈடோகோ ஆகிய பகுதிகளில் பு திதாக பிறந்த குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இரு ந்துள்ளது. அதுமட்டுமின்றி கர்ப்பமான பெண்கள்
சில ரை பரிசோதித்ததில் அவர்களுக்கும்எச்.ஐ.வி. பாதிப்புகள் பெருமளவு இருந்துள் ளது.

இதைத்தொடர்ந்து அப்பகுதிகளில் கடந்த சிலமாதங்களாக ஆய்வு மேற்கொண்டதில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பிறந்த குழந்தைகளுக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.இவற்றை தவிர போதிய மருத்துவசதியின்றி பெண்கள் குழந்தைகளுக்கு காசநோய், மலேரியா உள்ளிட்ட நோய்களால் பாதிப்பிற்குள்ளானர்கள் அதிகம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

0 கருத்துகள்: