தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.4.12

வட கொரிய ஏவுகணைத் திட்டம்; கண்டனம் வெளியிட்டுள்ள ஜி எட்டு நாடுகள்


வட கொரியா நீண்ட தூர ஏவுகணையை ஏவியமைக்கு ஜி எட்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கண் டனம் வெளியிட்டுள்ளனர்.ஐக்கிய நாடுகளின் பாதுகா ப்பு பேரவையின் தீர்மானங்களை மீறும் வகையில்வட கொரியா செயற்பட்டுள்ளதாக குறித்த நாடுகள் சுட்டிக் காட்டியுள்ளன.பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன் மைக்கு இந்த ஏவுகணை திட்டம் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளதாக ஜி
எட்டு நாடுகள் குறிப்பிட்டுள்ளதாகரொய்ட்டர் செய்தி வெளியிட் டது.

எதிர்காலத்தில் தடைசெய்யப்பட்ட ஏவுகணை தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டாம் என வட கொரியாவை வலியுறுத்தியுள்ள ஜி எட்டு நாடுகள், கொரிய தீபகற்பத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் எனவும் கூறியுள்ளன.

சர்வதேச ரீதியான கண்டனங்களுக்கு மத்தியில் வட கொரிய செயற்படுத்திய ஏவுகணை திட்டம் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: