தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.4.12

வடகொரிய ஏவுகணை கீழே விழுந்தது


இன்று அதிகாலை ஏவப்பட்ட வடகொரிய ஏவுகணை இ ன்று அதிகாலை வடகொரிய நேரம் 07.39 நிமிடத்திற்கு ஏ வப்பட்டது. பறப்பெடுத்த ஒரு நிமிடத்தில் தரையில் வி ழுந்ததாக தென் கொரிய உளவுப்பிரிவு அறிவித்துள்ளது. அதன் பின்னர் தகவல் வெளியிட்ட வடகொரிய செய்திப் பிரிவு ராக்கட் புறப்பட்ட ஒரு நிமிடத்தில் இருபது துண் டுகளாக உடைந்து சிதறி தென் கொரிய தலைநகர் சி யோலுக்கு 300 கி.மீ மேற்கே கடலில் விழுந்தது.வடகொ ரிய தலைவர் கிம் இல் சுங்கின் நூற்றாண்டு
ஞாபகார்த்தமாக அனுப்பப்பட்ட ரா க்கட் சர்வதேச நாடுகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் எடுக்கப்பட்ட முயற்சி யாகும். ராக்கட் கடலில் விழுந்தாலும் வடகொரியாவுக்கு எதிரான சர்வதேச எதிர்ப்பு நிறுத்தப்படாது. ஐ.நா பாதுகாப்பு சபையில் இதற்கான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் ஏவுகணைகளை அனுப்பும் பணியில் வடகொரிய தோல்வியடைந்தது சர்வதேச மட்டத்தில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பலத்த சந்தேகம் காரணமாக இந்த ராக்கட்டுக்கான எரிபொருளை நிரப்பாமல் வடகொரியா கடைசி நேரம்வரை தாமதித்திருந்தது. சர்வதேச எதிர்ப்பு, திடீர் தாக்குதல் போன்ற பல்வேறு சிக்கல்களுக்கிடையில் அந்த நாடு தடுமாறியது. இந்தத் தோல்வி வடகொரிய புதிய தலைவர் கிம் யோங் உங்கின் புதிய தலைமைக்கு கிடைத்த அடியாகும்.
மேலும் வடகொரிய நட்பு நாடுகளான சீனாவும், ரஸ்யாவும் கூட தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தன. சர்வதேச சட்டங்களுக்கு முரணாக வடகொரியா நடக்கிறது என்று ரஸ்யா எச்சரித்திருந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் இரண்டும் ஐ.நா பாதுகாப்புச் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருந்தன. ராக்கட் கீழே விழுந்து முயற்சி தோல்வியடைந்ததுள்ளதால் மற்றய நாடுகள் அமைதியாக இருக்க வேண்டுமென சீனா கேட்டுள்ளது. இந்த ராக்கட் புறப்பட்டதும் அதை வீழ்த்துவதற்கான செயற்பாடுகள் ஏதாவது நடந்ததா என்பதை வடகொரியா இன்னமும் அறிவிக்கவில்லை. ஆனால் தேசத்தலைவர் ஒருவரின் நினைவு தினத்தையும், விழுந்து வெடிக்கக்கூடிய ஆபத்துள்ள ராக்கட் ஏவுதலையும் தொடர்புபடுத்திய செயல் மிகவும் சிறுபிள்ளைத்தனமானது என்ற ஏளனத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்: