தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.3.12

ஆப்கன் ராணுவத்தில் தலிபான்கள் புகுந்துள்ளனர்

ஆப்கானிஸ்தானில் பல்வேறு உத்திகளை கையாண்டு ராணுவ த்தில் தலிபான்கள் சேர்ந்து வருவதாக அந்நாட்டு ராணுவ தெற் கு மண்டல கமாண்டர் அப்துல் ஹமீது குற்றம்சுமத்தியுள்ளார். அந்நாட்டின் ராணுவ உயர் அதிகாரி ஒருவரே இவ்வாறு கூறியு ள்ளது அங்கு பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆப்கானி ஸ்தானில் நிலவும்  பாதுகாப்பு சூழல் குறித்து "ராய்ட்டர்' செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி
மூலம் அளித்த பேட்டியில் அவர் இவ்விதம் தெரி வித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ தளத்தில் கடந்த மாதம் இ ஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதைய டுத்து அங்கு முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இத்தாக்குதலில் ஆப்கன் ராணுவ வீரர்கள் சிலரும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ராணுவ கமாண்டர் அப்துல் ஹமீது மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் கூறியது: ராணுவத்துக்குள் புகும் தலிபான்கள் ராணுவத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ வீரர்களுக்கு அவர்கள் பயிற்சி அளிக்கின்றனர். அவர்களை தங்கள் வசம் கொண்டுவர முயற்சிக்கின்றனர். இதுபோன்றவர்கள்தான் அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது தாக்குதலை நிகழ்த்தி வருகின்றனர். இதை அனுமதிப்பது அபாயகரமானது. இதனால் ராணுவத்துக்கு ஆள்தேர்வு செய்வதில் கடுமையான நடை முறையைப் பின்பற்ற வேண்டும். எந்த விதத்திலும் ராணுவத்துக்குள் தலிபான்கள் புகாத வண்ணம் ஆள்தேர்வு நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டும். மேலும், ராணுவ வீரர்கள் ராணுவத்துக்கு வெளியில் யாருடன் எல்லாம் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். அவர்களது செல்போன் பேச்சு பதிவு செய்யப்பட வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் ராணுவத்துக்குள் தலிபான்கள் சேர்வதை தடுத்து நிறுத்த இயலும் என்றார் கமாண்டர் அப்துல் ஹமீது. ஆப்கானிஸ்தானில் ராணுவம் மற்றும் காவல்துறை ஆகிய இரண்டிலும் சேர்த்து மொத்தம் 2,50,000 பேர்தான் பணியாற்றுகின்றனர். இதை 3,50,000 ஆக உயர்த்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

0 கருத்துகள்: