தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.3.12

2030 ஆம் ஆண்டளவில் பிரிட்டன் ஒரு கிறிஸ்தவ நாடாக இருக்காது'


2030 ஆம் ஆண்டளவில் பிரிட்டன் ஒரு கிறிஸ்தவ நாடாக இருக்காது என பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது. இப்போது பிரிட்டனில் ஏனைய மதங்களைச் சேர்ந்தோரின்  எண்ணிக்கை கிறிஸ்தவர்களைவிட அதிகமாக இருக்கும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ சமயமானது ஒவ்வொரு வருடமு; அதில் நம்பிக்கை கொண்டவர்கள் ஐந்து லட்சம் பேரை இழந்துவருகிறது. நாத்திகர்கள் மற்றும் இறை மறுப்பாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் 750,000 ஆக அதிகரித்து வருகிறது.

பிரித்தானிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் நூலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி கிறிஸ்தவ சமயத்தவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடையும் அதேவேளை இஸ்லாமியர்கள், இந்துக்கள, பௌத்தர்கள் முதலான ஏனயை சமயத்தவர்களின் எண்ணிக்கையில் தெளிவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 6 வருடங்களில் முஸ்லிம்களின் தொகை 37 சதவீதத்தாலும் இந்துக்களின் தொகை 43 சதவீததத்தாலும் பௌத்தர்களின் தொகை 74 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன. எனினும் சீக்கியர்கள், யூதர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளன  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க கொள்கையானது கிறிஸ்தவர்களுக்கு ஏற்றுக்கொள்ளதக்க முடியாதவகையில் பாரபட்சத்தை ஊக்குவிப்பதாக  கடந்தவாரம், 'நாடாளுமன்றத்திலுள்ள கிறிஸ்தவர்கள்' எனும் பிரித்தானிய எம்.பிகள் குழுவொன்று கூறியிருந்தது.

2010 ஆம் ஆண்டில் பிரிட்டனில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 41.1 மில்லியனாக இருந்ததாக அதாவது, கடந்த 6 வருடகாலத்தில் 7.6 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் கிறிஸ்தவ சமயத்தில் விசுவாசமற்றறவர்களின் எண்ணிக்கை 13.4 மில்லியனாக இருந்தது. இவர்களின் தொகை 6 வருடகாலத்தில் 49 சதவீதமாக அதிகரித்துள்ளது.

0 கருத்துகள்: