போலந்து நாட்டில் நேற்றிரவு இடம் பெற்றகோர மான ரயில் விபத்தொன்றில் 15 பேர் கொல்லப்பட் டதுடன் 56 பேர் படுகாயமடைந்துள்ளனர். எதிர் எ திர் திசைகளில் பாதை மாறி வந்து கொண்டிருந்த ரயில்கள் வேகமாக மோதியதால் இவ்விபத்து ஏற்ப ட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஷ்செகோசினி எனும் சிரிய கிராமத்தின் பிரதான ரயில் பாதையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மீட்பு பணிகளுக் காக
உடனடியாக இராணுவஹெலிகாப்டர்கள், 450 அவசர வாகனங்கள் மற்றும் மேலும் பல
உடனடியாக இராணுவஹெலிகாப்டர்கள், 450 அவசர வாகனங்கள் மற்றும் மேலும் பல
தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
எவ்வாறு ஒரு ரயில் பாதை மாறி வந்தது என்பது அதிர்ச்சி அளிப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்னமும் அதற்கான காரணம் கண்டுபிடிக்கப்படவிலை. தனது ரயில் சுமார் 120 KM/H வேகத்தில் வந்து கொண்டிருந்ததாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். போலந்து நாட்டில் கடந்த 20 வருடங்களில் நடைபெற்ற மிக மோசமான விபத்தாக இது பதியப்பட்டுள்ளது. போலந்து பிரதமர் பவ்லொஸ்கி நேரடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிக்ளை நேரில் பார்த்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக