தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.3.12

இந்தியா ஆதரவுடன் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் வெற்றியுடன் நிறைவேறியது


ஜெனிவா: இலங்கைக்கு எதிரான அமெரிக்கா கொண் டு வந்த 'மனித உரிமை மீறல் தீர்மானம்' ஐ.நாவில் நி றைவேறியது. இன்று நடந்த வாக்கெடுப்பில்இந்தியா உட்பட மொத்தம் 24 நாடுகள் இலங்கைக்கு எதிரான அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு அதரவு தெரிவித்தது. மேலும் இந்த
வாக்கெடுப்பை 8 நாடுகள் புறக்கணித்தன. அமெரிக்காவின்இந்த தீர்மானத்துக்கு கியூபா, ஈக்வடார், கிரிகி ஸ்தான் நாடுகள் உட்பட மொத்தம் 15 நாடுகள் எதிர்த்தன.

தீர்மானம் விவரம்

இலங்கையில் நடந்த இறுதிப் போர் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து கற்ற பாடம், நல்லிணக்க ஆணையம் என்று குழுவை இலங்கை அரசு நியமித்தது. மேலும் அந்த குழு, போர் நிகழ்வு மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரை அறிக்கையை தயார் செய்தது. இந்த பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்தியே அமெரிக்க இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளதாக ஐ.நாவில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

தமிழர்கள் பகுதியில் ராணுவத்தை இலங்கை திரும்ப பெற வேண்டும் : இந்தியா வலியுறுத்தல்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு அளித்த பேசிய இந்திய பிரதிநிதி, தமிழர்கள் பகுதியிலுள்ள ராணுவத்தை இலங்கை அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து பேசிய அவர் தமிழர் பகுதியில் புனரமைப்பு பணி செய்ய இலங்கைக்கு கால அவகாசம் நீடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், தமிழர்களுக்கு வீடு கட்டித்தர, அந்த பகுதியிலுள்ள கண்ணி வெடிகளை அகற்ற இலங்கைக்கு இந்திய அரசு உதவும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

உயிர் பாதுகாப்பு மண்டல ஆணையத்தின் எண்ணிக்கையை இலங்கை அரசு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், போரில் காணாமல் போனவர்கள் மற்றும் காவலில் உள்ளவர்களின் கணக்கை இலங்கை அரசு வெயிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு ஆதரவு

இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் இன்று நடைபெற்ற விவாதத்தில் இந்தியா உட்பட 47 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும், அச்சுறுத்தும் நடவடிக்கையை இலங்கை அரசு கைவிட வேண்டும் என்று ஐரோப்பிய கூட்டமைப்பில் இலங்கை அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.

இலங்கை அரசு எதிர்ப்பு

இறையாண்மை கொண்ட ஒரு நாடு சுயமாக நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைக்குழு கூட்டத்தில் இலங்கை அரசு கருத்து தெரிவித்துள்ளது. மேலும் ஐ.நா. மனித உரிமைக்குழுவின் தீர்மானம் சர்வதேச சட்டத்துக்கு முரணானது என இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்து.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு சீனா, கியூபா, ஈக்வடார் எதிர்ப்பு 

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு சீனா, கியூபா, ஈக்வடார், கிரிகிஸ்தான் உட்பட மொத்தம் 15 நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மேலும் ரஷ்ய பிரதிநிதியும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 

இலங்கை பாடுபடும் : உருகுவே பிரதிநிதி நம்பிக்கை

இலங்கையில் மக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட இலங்கை பாடுபடும் என்று மனித உரிமைக்குழுவில் உருகுவே பிரதிநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: