ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, இலங்கைத் தீவில் பதற்றமான சூழலை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கள இனவாதிகளால், தமிழர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படலாம் என்ற அச்சம் நிலை பரவியுள்ளதாக அறியமுகின்றது.குறிப்பாக கொழும்பில் உள்ள தமிழ் மக்கள் தேவையான உணவு மற்றும் அடிப்படைப் பொருட்களை வாங்கி சேமித்து வருகின்றனர்.
தேவை நிமிர்த்தம் கொழுப்புக்கு வந்த பல தமிழ் மக்கள் சொந்த இடங்களுக்கு விரைந்து திரும்பி வருவதாக அறியமுடிகின்றது.
பல தமிழ் வர்த்தகர்கள் தங்களது கடைகளையோ நிறுவனங்களை பாதுகாப்பதற்குரிய முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளதாக அறியமுடிகின்றது.
இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள், இது தொடர்பிலான தகவல்களை தமிழர் தரப்பு பிரதிநிதிகளிடம் இருந்து தொடர்சியாக பெற்று வருவதாக அறிமுடிகின்றது.
ஜெனீவாப் பிரேரணையினை முன்வைத்து, இலங்கை அரசாங்கம் இனக்கலவரத்தை இலங்கைத்தீவில் ஏற்படுத்த முனைவதாக தமிழர் தரப்பு பிரதிநிதிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
ஜெனீவாப் பிரேரணையூடாக இலங்கையின் இனநல்லிணக்கத்துக்கு சர்வதேசம் ஆபத்தினை ஏற்படுத்த விளைகின்றதென இலங்கை அரச தரப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.
ஜெனீவாப் பிரேரணை, இலங்கை இராணுவத்தினரை கூண்டில் ஏற்றத்திட்டம், மகிந்த ராஜபச்சவை மின்சாரக் கதிரையில் உட்கார வைக்க முயற்சி போன்ற முழக்கங்கள் தென்னிலங்கையெங்கும் ஒலிக்கவிடப்பட்டிருந்தன.
ஜெனீவாத் தீர்மானத்தால் பின்னடைவுகளையும், ஆபத்துக்களையும் சந்திக்கப் போகின்றவர்கள், இலங்கையில் வாழும் தமிழ் மக்களேயாவர் சிங்கள இனவாதிகளும் தொடர்ச்சியாக குரலெழுப்பி வருகின்றனர்.
இலங்கை அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் மேற்கௌளப்பட்ட இத்தகைய போக்கு சிங்கள இனவாதத்தை மேலெழுச் செய்துள்ளதோடு, தமிழர்கள் மீதான வெறுப்புணர்வை மேலோங்கச் செய்துள்ளதாக சமூக அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக