தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.3.12

பகவத் கீதையை தடை செய்ய முடியாது. ரஷ்ய கோர்ட் பரபரப்பு தீர்ப்பு.


இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையின் ரஷ்ய மொழி பெயர்ப்பை, அந்நாட்டில் உள்ள 'கிஸ்கான்' என்ற அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்டது. அந்த புத்தகத்தில் தீவிரவாதத்தை தூண்டும் கருத்துக்கள் இடம்பெற்று இருப்பதாகவும், இந்த புத்தகத்துக்கு தடை விதிக்க கோரியும் ரஷ்யாவை சேர்ந்த சைபீரியாவின் டோம்ஸ்க் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.கீழ்க் கோர்ட்டில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, சைபீரியாவின் டோம்

ஸ்க் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகில் வாழும் இந்துக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பகவத் கீதை புத்தகத்துக்கு தடை விதிக்கக் கூடாது என கோரிக்கை விடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை 21-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தனர். இந்த வழக்கு பற்றி 'இஸ்கான்' அமைப்பின் டைரக்டர் பிரஜேந்திர நந்தமன் நிருபர்களிடம் கூறுகையில், ''இந்த வழக்கில் எங்கள் தரப்பு கருத்துக்களை துல்லியமாக எடுத்துக் கூறியிருக்கிறோம். எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்'' என்றார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. பகவத் கீதை புத்தகத்துக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை, நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை அறிவித்தபோது, கோர்ட்டு அறையில் அமர்ந்திருந்த 'இஸ்கான்' அமைப்பின் நிர்வாகிகள் கைதட்டி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

0 கருத்துகள்: