தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.3.12

அமெரிக்காவுக்கு நிபந்தனை விதிக்கும் பாகிஸ்தான்


அமெரிக்கா உடனான உறவுகள் தொடரப்பட வேண்டும் என்றால், பல்வேறு நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என பாகிஸ்தான் கூறியுள்ளது.அமெரிக்கா- பாகிஸ்தான் உறவை புதுப்பிப்பது குறித்து தேசிய பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஓர் அறிக்கையை சமர்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்கா
நடத்தும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.
அதே போன்று பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்கா எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது. அவ்வாறு எடுக்கும் பட்சத்தில், அந்த நடவடிக்கை பாகிஸ்தான் சட்டத்திற்கு உட்பட்டு வெளிப்படையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியா- அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தம் போன்று, பாகிஸ்தான்- அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: