தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக இந்திய அரசாங்கமே முதலில் அறிவித்தது என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பூண்டோடு அழிக்க வேண்டுமென இந்தியா கங்கணம் கட்டியது.இந்தியா விடுதலைப் புலிகளை பல நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்தன் பின்னரே, இலங்கை அரசாங்கம் புலிகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க வேண்டுமென
கோரி வந்த சில நாடுகள் தற்போது அந்த முயற்சியை சீர்குலைக்க முயற்சிக்கின்றன. போரின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள சாதக நிலைமையை சில நாடுகள் விரும்பவில்லை.
கோரி வந்த சில நாடுகள் தற்போது அந்த முயற்சியை சீர்குலைக்க முயற்சிக்கின்றன. போரின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள சாதக நிலைமையை சில நாடுகள் விரும்பவில்லை.
நாட்டில் மீண்டும் கிளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதே அவற்றின் நோக்கமாக அமைந்துள்ளது. கட்சி பேதமின்றி இந்த முயற்சிகளை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதியமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக