தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.3.12

வே.பிரபாகரனின் முத்திரை வெளியிடப்பட்டமைக்கு பிரான்ஸ் மன்னிப்பு கோருகிறது?!


விடுதலைபுலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உருவப்ப டம் பொறிக்கப்பட்ட முத்திரைகள் வெளியிடப்பட்டமைக்கு , இலங்கைஅரசிடம் பிரான்ஸ் தனது மன்னிப்பை கோரியு ள்ளதாக பிரான்ஸ் இணைய ஊடகமான rFi செய்தி வெளி யிட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி. எல்.பீரிஸ் பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்டைன் ராபிகோனிடம் அளித்திருந்த முறைப்பாட்டை அடுத்து, இவ்விவகாரத்தை பிரான்ஸின் La Poste தபால் சேவல் துறை கவனத்தில் எடு த்துள்ளது.வி.புலிகளின்
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் உள்ளடங்களாக தமிழீழ அடையாள சின்னங்கள் பொறிக்கப்பட்ட 360 முத்திரிகைகள் பிரான்ஸ் தபால் நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. Phil@poste Service இன் கீழ் தனிப்பட்ட நபர்களின் உருவப்படங்களை முத்திரைகளாக கோர முடியும் என்பதால், இம்முறையின் கீழ் தவறுதலாக  இவ்வாறான 'பொருத்தமற்ற காட்சியமைப்புக்கள்' அச்சிடப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளதுடன், வி.புலிகளின் அமைப்பு தொடர்பான முத்திரைகள் இனி பிரசுரிக்கப்பட மாட்டாது எனவும் கூறியுள்ளது.

மேலும் எந்தவிதமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிக்கப்பட மாட்டாது எனவும் பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது. 

0 கருத்துகள்: