ஓமனில் உள்ள முலாதா பகுதியில் இந்திய பள்ளியில் பிளஸ் 2 படித்தவன் நூர் முகமது. இவனது நண்பன் முனீத் ஷா. இவன் கோவாவை சேர்ந்தவன். ஓமனில் உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இப்போது பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், சில நாட்களுக்கு முன்னர் நண்பர்களுடன் சேர்ந்து சவாதி கடற்கரைக்கு சென்றான் நூர்.அதன்பின் அவனை பற்றி தகவல் இல்லை. புகாரின் அடிப்படையில் கப்பல் படையினர் மற்றும் போலீசார்
கடல் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நூர் முகமதுவின் சடலத்தை கைப்பற்றினர்.கடலில் தத்தளித்து கொண்டிருந்த முனீத் ஷாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவனது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடலில் மூழ்கி இறந்த நூர் முகமதுவின் தந்தை, ஓமனில் உள்ள பர்கா பகுதியில் கோழிப் பண்ணை வைத்துள்ளார். இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக