தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.3.12

நோர்வேயின் கேர்குலிஸ் விமானம் விபத்து ஐவர் மரணம்..

நோர்வேயின் படைத்துறைக்கு சொந்தமான கேர்குலீ ஸ் விமானமொன்று ஐந்து விமானப் படைத்துறை அதி உயர் அதிகாரிகளுடன் விழுந்து நொறுங்கியுள்ளது. சுவீ டனின் வடக்குப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ள து, இப்போது தீவிரமான தேடுதல்கள் நடக்கின்றன. வி மானம் எப்படி கட்டுப்பாட்டை இழந்தது, நடந்த சம்பவ மென்ன..? மேற்கண்ட கேள்விகளுக்கு உடனடியாக பதி ல் கிடைக்கவில்லை. தேடுதல்கள் நடைபெறுகின்றன, அப்பகுதியில் காலநிலை
சீராக இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. நோஸ்க் பாதுகாப்பு அமைச்சர் எஸ்பன் பாத் ஐட தமது ஆழ்ந்த கவலைகளை வெளியிட் டுள்ளார். கேர்குலீஸ் விமானம் பெரும் தளவாடங்களை ஏற்றிப்பறிப்பது, சுவீட னின் வடபகுதிக்கு ஏன் அது போனது..? பக்கத்தில் புதிய சன்னதங்களுடன் ரஸ்ய அதிபராக புற்றின் பதவிக்கு வந்துள்ளார். நேற்று ஐரோப்பிய ஒன்றியம் அவருடைய தேர்தல் வெற்றி செல்லுபடியாகாது என்று தீர்மானம் இயற்றியது தெரிந்ததே. ஏற்கெனவே ரஸ்ய விமானங்கள் ஸ்கன்டிநேவியன் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து விரட்டியடிக்கப்படுவது வழமை. இத்தகைய பின்னணிகள் எங்காவது பொறி கக்கியதா என்பது தெரியவில்லை. ஆனால் பிந்திக் கிடைத்த செய்திகளின்படி விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 2100 மீட்டர் உயரத்தில் சென்றபோது மலை முகட்டில் மோதிச் சிதறியுள்ளது. ஐந்து விமானப்படை அதிகாரிகளதும் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இறந்த ஐவரது புகைப்படங்களுமே மேலே இடம் பெற்றுள்ளன.

0 கருத்துகள்: