தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.3.12

பட்ஜெட்டில் சுங்கவரி அதிகரிப்பு அறிவிப்பால் தங்கம் விலை திடீர் உயர்வு.


நம் நாட்டில் ஏற்கெனவே தங்கம் விலை ஜெட் வேகத்தில் செ ன்று கொண்டிருக்கிறது. உலக நடப்புகள் தான் தங்கத்தின் வி லையை தீர்மானிக்கிறது என்றாலும், இன்று அறிவிக்கப்பட் ட பொது பட்ஜெட்டில் தங்கத்தின் விலை உயர்வதற்கான சி ல அம்சங்கள் இருந்தன.நம் நாட்டில் பயன்படுத்தப்படும் தங் கம் முழுவதும் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப் படுபவை தான். இப்படி இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக் கு சுங்க வரி செலுத்தப்படுகிறது. இந்த வரியை, 2012-13 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் உயர்த்தியுள்ளார், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. மத்திய அரசு ஏற்கெனவே இரண்டு மாதங்களுக்கு முன்பு இறக்குமதி வரியை 2 சதவிகிதம் அதிகரித்தது. சென்ற நிதியாண்டின் பட்ஜெட் பற்றாக்குறையை சரி செய்ய இந்த 2 சதவிகித உயர்வு பயன்படும் என சொல்லப்பட்டது. 

இதனால் தங்கத்தை வாங்கும் வியாபாரிகள் அதிக விலை கொடுத்து தங்கத்தை வாங்க வேண்டிய சூழலும், அந்த சுமையை பொது மக்கள் தலையில் இறக்கி வைக்கும் விதமாக விலையை அதிகரித்து விற்பார்கள் என கூறப்பட்டது. 


இந்த நிலையில், தற்போது தங்கத்துக்கான சுங்க வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு செய்யப்பட்ட தங்கத்துக்கு சுங்க வரி இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்டு தங்கத்துக்கு (சுத்தமான 24 கேரட் தங்கம்) சுங்க வரி இரண்டு சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 


மற்ற ஆபரணத் தங்கங்ளுக்கு 5 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக சுங்க வரி அதிகரிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இதனால் தங்க விலை அதிகரிக்குமா என சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் அமைப்பின் தலைவர் ஜெயந்திலால் சலானியிடம் கேட்ட போது, "ஏற்கெனவே இறக்குமதி வரியை அதிகரித்த அரசாங்கம் தற்போது பட்ஜெட்டில் சுங்க வரியை அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை அதிகரிக்கவே செய்யும். இதனால் ஒரு கிராமுக்கு 70 ரூபாய் வரை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இன்றே அதன் தாக்கம் தெரிய ஆரம்பித்துவிட்டது," என்றார்.
 

உலக நடப்புகளால் சமீப வாரங்களில் தான் தங்கம் விலை குறையத் துவங்கியது. அதனால் சற்று மகிழ்ச்சியடைந்தனர் மக்கள். ஏற்கெனவே தங்கத்தை வாங்க முடியாமல் மக்கள் தவிக்கும் வேளையில் இந்த வரி உயர்வால் மேலும் திண்டாட்டம் தான்!

0 கருத்துகள்: