பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள யேமன் அதிபர் அலி அப்துல்லா நாட்டை விட்டு வெளியேற புதிய நிபந்தனையை விதித்துள்ளார். அதன்படி தான் நாட் டை விட்டு வெளியேற வேண்டுமென்றால் தனது எதிரிகள் 10 பேரையும் நாட்டை விட்டு வெளியேற் ற வேண்டுமென்று அவர் வலியுறுத்தியுள்ளார்.மூத் த ராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள், பழக்குடி யின தலைவர்கள் ஆகியோர்
இந்த 10 பேரில் அட ங்குவர். இவர்கள் அனைவருமே அலி அப்துல்லாவுக்கு எதிரான போராட்டத்தி ல் தீவிரமாக ஈடுபட்டவர்கள். இவர்களால்தான் யேமனில் அமைதி கெட்டு விட் டதென அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த 10 பேரில் அட ங்குவர். இவர்கள் அனைவருமே அலி அப்துல்லாவுக்கு எதிரான போராட்டத்தி ல் தீவிரமாக ஈடுபட்டவர்கள். இவர்களால்தான் யேமனில் அமைதி கெட்டு விட் டதென அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
அலி அப்துல்லாவின் இந்த அறிவிப்பால் அவர் நாட்டை விட்டு வெளியேறும் மனநிலைக்கு வந்து விட்டார் என்பது உறுதியாகியுள்ளது. முன்னதாக கடந்த ஓராண்டுக்குமேல் அலி அப்துல்லாவின் எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டில் தனது அதிகாரங்களை துணை அதிபர் மன்சூர் ஹேதியிடம் அவர் வழங்கினார்.
இந்நிலையில் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிப்பது: யேமனின் பிரச்னைகளுக்குக் காரணமாக இருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அப்துல்லாவின் இந்த அறிக்கையை எதிர்ப்பாளர்கள் நிராகரித்துள்ளனர். இளம் புரட்சியாளர் படையைச் சேர்ந்த அல் அஷாகி இது தொடர்பாகக் கூறுகையில், "அப்துல்லா ஒரு பொய்யர். இப்போது வார்த்தைகளை வைத்து அவர் விளையாடத் தொடங்கியுள்ளார். அதிகாரத்தை தக்கவைக்க அவர் பல்வேறு தந்திரங்களைக் கையாலுகிறார். அதில் இதுவும் ஒன்று. எனவே அவரது அறிவிப்பு எங்களுக்கு எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக