தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.3.12

அரசு பணத்தில் ஆன்லைனில் ஆடம்பர செலவு செய்த சிரியா அதிபர் மனைவிக்கு சிறை?


சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்தின் மனைவி, ஆடம்பரமாக ஷாப்பிங் செய்த குற்றத்துக்காக சிறையில் தள்ளப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.சிரியாவில் உள்நாட்டு கலவரம் தொடர்ந்து நடந்து வருகிறது. மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் திண்டாடி வருகின்றனர். மக்களாட்சியை வலியுறுத்தி போராட்டம் நடத்துபவர்கள் மீது ராணுவத்தினர் கண்மூடித்

தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதிபர் பஷார் அல் ஆசாத்தும் அவரது மனைவி அஸ்மாவும் லட்சக்கணக்கான பணத்தில் ஆன்லைன் ஷாப்பிங் செய்துள்ளனர். பாரிசில் உள்ள நிறுவனத்திடம் இருந்து மேசை, நாற்காலிகள், மெழுகுவர்த்தி வைக்கும் ஸ்டாண்டுகள், அலங்கார விளக்குகளை ஆன்லைனில் ஷாப்பிங் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக பஷாரும், அவரது மனைவி அஸ்மாவும் அனுப்பிய இமெயில்கள் வெளியாகி உள்ளன. அரசு பணத்தை சட்டவிரோதமாக ஆடம்பரமாக செலவு செய்த குற்றச்சாட்டின் கீழ், அஸ்மாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 கருத்துகள்: