தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.3.12

கஸ்மியின் மனு:போலீஸ் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!


புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்ட பிரபல மூத்த பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மியிடம் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத் விசாரணை நடத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய டெல்லி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மொசாத் விசாரணை நடத்தியது தொடர்பான அதிகாரப்பூர்வ
ஆவணத்தையும் பிரமாணப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் விநோத் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
யூனிஃபார்ம் அணியாத இஸ்ரேலிய அதிகாரி தன்னிடம் விசாரணை நடத்துகிறார் என்ற கஸ்மியின் புகார் மனுவில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விசாரணை நடத்திய அதிகாரியின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை துணை கமிஷனர் ரேங்க் அந்தஸ்துடைய போலீஸ் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதே வேளையில், கஸ்மியை விசாரணைச் செய்யும்போது சித்திரவதைச் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு நீதிமன்றத்தில் ஆவணம் மூலம் தெரிவித்தது.

0 கருத்துகள்: