தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.3.12

நோர்வே விமானிகளின் சிதறிய சடலங்கள்.


நேற்று முன்தினம் சுவீடனின் வடபுலத்தில் மலை முகட்டுடன் மோதிய நோர் வேயின் கேர்குலீஸ் இராட்சத விமானம் சிதறி சிதிலமாகிக் கிடப்பது கண்டு பி டிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை விமானிகளில் யாராவது உயிரோடு இருக்க லாம் என்ற புரளி கிளப்பிவிடப்பட்டிருந்தது ஆனால் இன்று அவர்களுடைய சி தறிய உடலங்கள் ஆங்காங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேற்படி தகவலை தேடுதல் நடவடிக்கையில் குதித்த சுவீடன் விமானப்படை அதிகாரிகள் வெளி யிட்டனர். அதன் பின்னர் நோர்வே பிரதமர் இறப்பை ஊர்ஜிதம் செய்து தமது ஆ ழ்ந்த அனுதாபங்களை உறவினருக்கு தெரிவித்தார்.
இந்த விமானத்தில் பயணித்த ஐவரும் அதி உயர் பயிற்சி பெற்ற விமானப்படை உத்தியோகத்தர்களாகும். இவர்கள் கேர்குலீஸ் விமானத்தை இயக்குமளவுக்கு சாதுரியம் பெற்ற ஊழியர்கள் என்பதும், இவர்கள் இழப்பு நாட்டுக்கு பேரிழப்பு என்பதும் கவனிக்கத்தக்கது. அதி நவீன விமானம் ஒன்று நிலை தடுமாறி மலை முகட்டில் இடிக்குமளவுக்கு காலநிலை சீரற்று இருந்தாக கருதப்படுகிறது.
( நோர்வே விமானம் அப்பகுதியில் இடம் பெற்ற போர்ப்பயிற்சியில் ஜெட் விமானம் ஒன்றினால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜேர்மனிய – சுவீடிஸ் விமானங்கள் பல இத்தருணம் பறந்துள்ளன. அப்போது ஏற்பட்ட தப்பான கணிப்பில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.)

0 கருத்துகள்: