தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.3.12

இந்தியாவின் மீது பொருளாதார தடைகளா? அமெரிக்கா விளக்கம்


ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தாவிட்டால், பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த செய்தியால் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க வெளிவிவகாரத்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறியதாவது: இந்த செய்தி ஊகத்தின்
அடிப்படையானது. அத்தகைய முடிவை அமெரிக்கா எடுக்கவில்லை. ஈரான் எண்ணெய் இறக்குமதி விவகாரம் தொடர்பாக இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

ஈரானின் எண்ணெயை சார்ந்து இருப்பதை குறைக்கப் போவதாக இந்தியா கூறி இருப்பதை, சாதகமான மாற்றமாக கருதி வரவேற்கிறோம். அணுகுண்டு தயாரிக்கவிடாமல் ஈரானை தடுப்பதில், இந்தியா எங்களது மதிப்புமிக்க கூட்டாளி என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும், இந்த செய்தி அமெரிக்காவின் கொள்கையை துல்லியமாக பிரதிபலிக்கவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர் என்று கூறினர்.

0 கருத்துகள்: