தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.3.12

அமெரிக்க அடிமைகளை எதிர்த்து போராடுங்கள் மக்களே: ஜவாகிரி அழைப்பு


அமெரிக்காவின் அடிமைகளை எதிர்த்து போராடுங்கள் என்று பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அல் ஜவாகிரி.அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள புரட்சியை போன்று பாகிஸ்தானிலும் அந்நாட்டு அரசு மற்றும் இராணுவத்தை எதிர்த்து மக்கள் புரட்சியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் பாகிஸ்தான் இராணுவத்தை “அமெரிக்காவின் அடிமைகள்” என வர்ணித்துள்ளார். தற்போது
அல் ஜவாகிரி எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை. ஆனால் இவரது பேச்சுவார்த்தை கொண்டு 10 நிமிட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் அவர் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் இராணுவம் தனது நம்பிக்கை துரோகத்தை கைவிட வேண்டும் என்றால், அதற்கு எதிராக கோடிக்கணக்கான மக்கள் திரள வேண்டும்.
பாகிஸ்தான் மக்களுக்கு அரபு புரட்சி வழிகாட்டியுள்ளது. அரசு மற்றும் இராணுவத்திற்கு எதிராக நீங்கள் புரட்சியில் ஈடுபட வேண்டும்.
பாகிஸ்தான் இராணுவம், அமெரிக்காவின் அடிமைகளாகச் செயல்படுகிறது. நீங்கள் புரட்சியில் ஈடுபடாத வரை அது அமெரிக்காவிற்கு எதிராகச் செயல்படாது என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: