இன்று ஈரானின் 33 வது சுதந்திரதினமாகும். மேலை நா டுகளின் கைப்பொம்மையாக இருந்த மன்னர் ஷாவிடமி ருந்து 1979 ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி மூலம் ஈரா னை மீட்பு செய்த ஆண்டின்; நினைவு நாளாகும். நேற்று பொது மக்களிடையே ஈரான் சுதந்திரதின உரையாற்றிய அதிபர் அஹமது நிஜாத் அணுசக்தி தொடர்பாக ஈரான் எ டுத்த வேலைத்திட்டம் மேலும் ஒரு சில தினங்களில் முடிவடைய இருப்பதாக அறிவித்தார். ஈரானின் அணுச க்தி திட்டம் சிறகு விரித்து பறக்கப்போவதை
காணப் போகிறீர்கள் என்று கூறிய அவர் மேலை நாடுகளின் அச்சுறுத்தலுக்கு ஈரான் ஒருபோதும் அடி பணியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேல் – அமெரிக்காவின் அச்சுறுத்தல் செல்லாக்காசு விவகாரம் என்பதையும் இறுமாப்புடன் சுட்டிக்காட்டினார். நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் என்ற தொனி அவருடைய குரலில் துலங்கியது.

மேலும் அவர் கூறும்போது பொருளாதார தடைகளை விதித்து, தாக்குதல் அச்சுறுத்தல்களை காட்டி மேலை நாடுகள் நாடகமாடுகின்றன. ஒரு பக்க நீதிக்கே எல்லோரும் தலை சாய்க்க வேண்டுமென கருதுகிறார்கள். ஆனால் அணு சக்தி விவகாரத்தில் ஈரானுக்கு ஓர் உரிமை இருக்கிறது. அதை மதித்து நடக்க வேண்டிய தார்மீக பொறுப்பு உலக நாடுகளுக்கு இருக்கிறது. அதைவிடுத்து பயமுறுத்தலில் குதிக்கக் கூடாது.
மேலை நாடுகள் உலகத்தை காலனித்துவ நாடுகளாக வைத்திருக்க விரும்புகின்றன. இஸ்ரேலிய மோசாத்துடன் சேர்ந்து சுதந்திரமற்ற உலகத்தை உருவாக்க இவர்கள் ஆசைப்படுகிறார்கள். அது வெறும் பகல் கனவாகும் என்றும் வீறாப்புடன் பேசினார். மானிடப் படுகொலைகளை செய்யும் மேலை நாடுகளிடமிருந்து உலகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு நவீன ஈரானுக்கு இருக்கிறதென்று ஆயிரக்கணக்கான மக்களிடையே பேசும்போது அவர் தெரிவித்தார். ஆக ஈரான் அணு குண்டு வெடித்து பரிசோதிக்கும் இடத்தை நெருங்கிவிட்டதென்பது இதன் கருத்தாகும். ஈரானிடம் அணு குண்டு வந்தால் மத்திய கிழக்கு விவகாரம் வேறு திசையில் திரும்பும் என்பது தெரிந்ததே. அதைத் தொடர்ந்து வடகொரியாவிலும் இதே குரல் கேட்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக