தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.2.12

பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை


ஓவர்டேக் செய்வதில் ஏற்பட்ட மோதலில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை செய்யப்பட்டார். நூற்றுக்கணக்கான பயணி கள் முன்னிலையில் இந்த கொடூர சம்பவம் திருச்சியில் இன்று (சனிக்கிழமை) நடந்தது.திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இ ருந்து திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்குளத் திற்கு இ ன்று காலை 7 மணிக்கு ஒரு தனியார் டவுன் பஸ் சென்றது. ப ஸ்சை சுந்தர்ராஜ் (44) என்ற டிரைவர் ஓட்டிச்சென்றார் பால்பண் ணை அருகே வந்தபோது காய்கறி ஏற்றிய லாரி முன்னால் செ ன்றது. பஸ் டிரைவர் ஓவர்டேக் செய்ய முயன்றார். ஆனால்
லாரி டிரைவர் வழிவிடாமல் சென்றுள்ளார். இதனால் பஸ் டிரைவரும் வேகமாக சென்று முந்த முயன்றார்.
காட்டூர் பஸ் நிலையம் அருகே லாரியை ஓவர்டேக் செய்த பஸ் டிரைவர் லாரி அருகே வந்து பஸ்சை நிறுத்தினார். அங்கு இரு டிரைவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் நடுரோட்டில் வண்டிகளை நிறுத்தி இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னும் பின்னும் பல பஸ்கள் வரிசை கட்டி நின்றன.
‘பஸ்சுக்கு சைடு கொடுத்தால் என்ன? ஏன் இப்படி முரட்டுத்தனமாய் லாரி ஓட்டுகிறாய் நாங்கள் தான் நேரத்துக்கு பஸ்சை எடுக்க வேண்டும் வேகமாக போகிறோம். உனக்கு என்ன? என்று கேட்டார். அப்படித்தான் வண்டி ஓட்டுவேன் குறுக்கே எவன் வந்தாலும் அடித்து போட்டுவிட்டு போய்ககொண்டே இருப்பேன் என்று லாரி டிரைவர் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த பஸ் டிரைவர் சுந்தர்ராஜ், தனது சீட்டில் இருந்து இறங்கி லாரி முன் நின்றுக்கொண்டு அடித்து போட்டு விட்டு போடா பார்க்கலாம் என்றார். கண் இமைக்கும் நேரத்தில் லாரி டிரைவர் லாரியை சுந்தர்ராஜ் மீது ஏற்றி விட்டு தஞ்சை ரோட்டில் வேகமாக போய்விட்டார்.
லாரி ஏறியதும் அந்த இடத்திலேயே சுந்தர்ராஜ் துடிதுடித்து இறந்தார். நூற்றுக்கணக்கான பயணிகள் முன்னிலையில் இந்த கொலை அரங்கேறியது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் துவாக்குடியில் உள்ள சுங்கசாவடிக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு இந்த லாரியை தடுத்து நிறுத்தினர். போலீசார் சென்று டிரைவரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.
விசாரணையில் அவர் தஞ்சை கும்பகோணம் தாராசுரம் ரோட்டை சேர்ந்த அப்துல் ஹமீது மகன் முகமது காசிம்(29) என்பதும், திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து காய்கறி லோடு கொண்டு சென்றதும் தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட பஸ் டிரைவர் சுந்தர்ராஜ் திருச்சி ஏர்போர்ட் அண்ணாநகர் கரிகாலன் தெருவை சேர்ந்தவர். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். மகள் சகாய டெய்சி பிளஸ் 2 படித்து வருகிறார். மகன் ராகுல் ரிச்சர்டு 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

0 கருத்துகள்: