தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.2.12

சல்மான் குர்ஷித்- தேர்தல் ஆணையம் :தொடரும் மோதல்


உத்திரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக சல்மான் குர்ஷித் பேசியதால் இ வருக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் உள்ள மோதல் முற் றுப் பெறாமல் தொடர்ந்தவன்னமே உள்ளது. இதற்கிடை யே தேர்தல் ஆணையம் என்னை தூக்கில் போட்டாலும் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என சல்மான் குர்ஷித்
கருத்து தெரிவி த்துள்ளார்.இந்நிலையில் தேர்தல் ஆணையம் சல்மான் குர் ஷித் குறித்து குடியரசுத்
தலைவர் பிரதீபா பட்டீலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

இதில்," தேர்தல் நடத்தை விதிகளுக்கு சல்மான் குர்ஷித் தொடர்ந்து மீறி வருகிறார், இவரின் நடவடிக்கை தேர்தல் ஆணையத்தின் சட்டபூர்வ உத்தரவை அவமதிப்பாக உள்ளது, எனவே குடியரசுத் தலைவர் உடனடியாக தலையிட்டு  உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: