புது டெல்லி: டெல்லியில் பிரதமர் இல்லத்திற்கு அருகில் இருக்கும் இஸ்ரேலிய நாட்டு தூதரகம் அருகே நின்று கொண்டிருந்த இஸ்ரேலிய தூதரகத்துக்குச் சொந்தமான கார் நேற்று வெடித்துத் தீப்பிடித்ததில் பெண் தூதரக அதிகாரி ஒருவர் உள்பட 4 பேர் காயமடைந்தது அறிந்ததே."இக்குண்டு வெடிப்பிற்கு ஈரானே காரணம் என்று கூறிய இஸ்ரேல் பிரதமர் இதற்கு பதிலடி கொடுக்கப்படும்" என்றும் எச்சரித்தார். ஈரானுடனான உறவை துண்டிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி இந்தியா ஈரானுடன்
தூதரக உறவை வலுப்படுத்தும் நிலையில் இக்குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாலும் இது குறித்து எவ்வித புலனாய்வு எச்சரிக்கையும் முன்னமேயே கொடுக்கப்படாததாலும் இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே நட்புறவைச் சீர்குலைக்கும் திட்டத்துடன் இஸ்ரேலே இக்குண்டு வெடிப்பின் பின்னணியில் இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.

இச்சூழலில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த உள்துறை செயலர் ஆர்.கே.சிங்கிடம், "இத்தாக்குதலின் பின்னணியில் ஈரான் உள்ளதா?" என்று கேட்டதற்கு, "இதுவரை இக்குற்றச்செயலின் சூத்திரதாரி யார் என்பதும் எந்நாட்டையும் சம்பந்தப்படுத்தும் எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை" என்று கூறினார்.
மேலும் "இத்தாக்குதலில் எவ்வித பேட்டரியோ சர்க்யூட்டோ பயன்படுத்தப்படவில்லை" என்றும் "ஆர்.டி.எக்ஸ் பயன்படுத்தப்படவில்லை" என்றும் கூறிய சிங், எல்லா மாநில அரசுகளுக்கும் யூத தலங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்துமாறு அறிவுரை கூறியிருப்பதாகவும் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக