தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.2.12

தென்கொரியாவில் பேய் ஓட்டுவதாக கூறி மூன்று குழந்தைகளை அடித்துக் கொன்ற பாதிரியார் கைது.


தென் கொரியாவின் தெற்கு சொல்லா மாகாணத்தில் வீட்டிலேயே பிராத்தனை கூடத்தை அமைத்து போத னை செய்து வந்தார் 43 வயதான சர்ச் பாதிரியார். இவர் தன்னுடைய 5, 8, 10 வயதுடைய மூன்று குழந்தைகளுக் கும் பேய்களால் நோய் ஏற்பட்டிருப்பதாக கூறி அவர்க ளை அடித்து கொன்றதாக
கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடைய
மனைவியையும். போலீசார் கைது செய்துள்ளனர். இவர்க ளிடம் விசாரித்ததில் பேய்களால் தங்களுடைய குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும், அதனால் அவர்களின் கைகளை கட்டி அவர்களை தொடர்ந்து அடித்ததாகவும் தெரிவித்துள்ளனர். 

மேலும் குழந்தைகள் இறந்ததற்கான காரணம் தெளிவாக இல்லாத நிலையில், நோயினால் பலவீனமடைந்த குழந்தைகளை வீட்டின் அறையில் பூட்டி வைத்து அடித்ததால் அவர்கள் அதிர்ச்சியில் இறந்திருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். 

இந்நிலையில் பிரேத பரிசோதனையின் முடிவில் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதியிலிருந்து குழந்தைகள் எதுவும் சாப்பிடவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 கருத்துகள்: