தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.2.12

நாடு முழுவதும் உள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு உத்தரவு


டெல்லியில் இஸ்ரேல் தூதரக கார் தகர்க்கப்பட்ட சம் பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள தூதரக ங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அர சு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல், அமெரிக் கா மற்றும் மேலைநாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு
அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.டெல்லி, மும்பை, கொல்கத்தா,
சென்னை, ஐதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் உ ள்ள பாதுகாப்பு அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நகரங்களில் உள்ள தூதரகங்களுக்கு, எந்த தாக்குதலையும் முறியடிக்கக்கூடிய வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
தூதரகங்களுக்கு அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. தூதரகத்துக்கு வரும் வாகனங்களும், ஆட்களும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.

0 கருத்துகள்: