தனியார் கிறிஸ்தவ பள்ளியில் நவீன ராமாயணம் என்ற பெய ரில் நடத்தப்பட்ட நாடகத்தில் இந்து கடவுள்களை அவமதித்தா க கூறி இந்து முன்னணியினர் போராட்டம் நடத்த முயன்றனர் .இதைத்தொடர்ந்து அந்த பள்ளியைச் சேர்ந்த 2 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.சென்னையை அடுத்த மீஞ்சூரில் உ ள்ள செயின்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் ஆண்டு வி ழா நடந்தது.
விழாவுக்கு பள்ளி தாளாளர் செல்வராணி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜான்சிராணி முன்னிலை வகித்தார்.விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 'நவீன ராமாயணம்' என்ற பெயரில் நடைபெற்ற நாடகத்தில் இந்து கடவுள்களான ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையிலும், இந்து கடவுள்கள் சினிமா பாடல்களை பாடி கேலி செய்வது போன்றும் காட்சிகள் இடம் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது.
இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், இந்துக்களின் கடவுள்களை விமர்சனம் செய்யும் வகையிலும் இருந்ததாக கூறி ஒன்றிய இந்து முன்னணி தலைவர் சசிக்குமார் மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்த புகாரின் பேரில் முறையான விசாரணை நடைபெறவில்லை என்று கூறி பொன்னேரி டி.எஸ்.பி ஜெகதீஸ்வரனிடம் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்ட நிலையில் பதற்றம் ஏற்படாத வண்ணம் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி.குமார், பொன்னேரி டி.எஸ்.பி.ஜெகதீஸ்வரன் இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், வெங்கடேசன், அப்துல்காதர் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், விஜயன், பிரபாகரன், ஆனந்தன், ரகு, உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் 'நவீன ராமாயணம்' என்ற பெயரில் நாடகம் நடத்திய பள்ளி நிர்வாகிகள் மீது மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பள்ளிக்கூட ஆசிரியர்கள் சரவணமுரளி (வயது 32). காந்திநாத் (31) ஆகிய இருவரை கைது செய்தனர்.
கன்னியாஸ்திரிகளான பள்ளியின் தாளாளர் செல்வராணி, பள்ளி முதல்வர் ஜான்சிராணி ஆகியோரை பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இந்த விவகாரத்தில் போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்து முன்னணியினர் குறை கூறினார்கள். இந்து முன்னணியினரின் அழைப்பின் பேரில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளான ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன், பாஸ்கர், சோமுராஜசேகர், ஒன்றிய பொறுப்பாளர் குமார் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்த மீஞ்சூர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர்.
அவர்களிடம், 'இந்த பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் சரவணமுரளி, காந்திநாத் ஆகியோரை போலீசார் பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் மீஞ்சூரில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்தால் மீஞ்சூரில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக