தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.2.12

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டவர் எரிந்த சடலமாக மீட்பு?

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன ந்தெரியாத ஆயுதகுழு ஒன்றினால் நேற்றைய முன் தி னம் சந்தேக நபர் ஒருவர் கடத்தப்பட்டிருந்தார். இந்தக் கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து,அவரது உறவினர்கள் இன்று புதுக்கடை நீதிமன்றிற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போதைப்பொருள் வழக்கொன்றின் சந்தே க நபரான தெமட்டகொட மேர்வின் அல்லது ஜேசுதாச ன் எனப்படும் .சந்திரபால என்ற நபரே இவ்வாறு கடத்த ப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட சந்தேகபர் தொடர்பு பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு பிணை வழங்குவதற்கு நீதிமன்றம் அனுமதித்தது. இந்நிலையில் பிணைக்கான ஆவணங்கள் தயாராகும் வரை, நீதிமன்றக் காவற் கூண்டில் சிறைவைக்கடுவதற்காக அவர், சிறையதிகாரியின் பாதுகாப்பில் அழைத்துச் செல்லப்படுகையில், அங்கு வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள், சிறையதிகாரியை ஆயுதமுனையில் மிரட்டி, சந்தேக நபரைக் கைவிலங்கிடப்பட்ட நிலையிலேயே கடத்திச் சென்றிருந்தனர்.
நீதிமன்ற வளாகத்தில், பெருமளவு மக்கள் கூடியிருந்த நிலையிலேயே இச்சம்பவம் நடைபெற்றிருந்த இந்த கடத்தற் சம்பவத்தைக் கண்டித்து, அவரது உறவினர்கள் இன்று காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் கடத்தப்பட்ட மேற்படி சந்தேக நபர் இன்று சடலாமாக மீட்கப்பட்டிருப்பதாகப் பிந்திக் கிடைத்த செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்புடொரிங்டன் பகுதியில் மின்சார கம்பத்துக்கு அருகில் எரிந்த நிலையில் காணப்பட்ட ஒரு சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு மீட்கப்பட்ட சடலம், நேற்று இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டவர் என சந்தேகிக்கப்படுவதாக அறியப்படுகிறது. ஆயினும் இத்தகவல் இன்னமும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

0 கருத்துகள்: