தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.2.12

தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை: ஆப்கான் அரசு அதிர்ச்சி


ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக தலிபான்களுடன் அமெரிக்க அதிகாரிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது ஆப்கான் அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு, அல்கொய்தா இயக்கத்தை ஒழிப்பதற்காக அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டன. அதன் ஒரு நடவடிக்கையாக அங்கிருந்த தலிபான் அரசை மாற்றியமைத்து புதிய அரசை ஏற்படுத்தியது.இதன் பின்னர் பாகிஸ்தானில் மறைந்திருந்த அல்கொய்தா தலைவர்   பின்லேடனை அமெரிக்க படைகள் சுட்டுக் கொன்றன. இந்நிலையில் ஆப்கானில் இருந்து படைகள் வெளியேறப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஆப்கானில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் அமெரிக்க அதிகாரிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கத்தாரில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் தலிபான் தலைவர் முல்லா ஓமரின் செயலாளர் உட்பட 8 பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அப்போது குவான்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுவிக்குமாறு தலிபான் இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். எனினும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

0 கருத்துகள்: