தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.2.12

பிளாஸ்டிக்கில் 10 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு

ரூபாய் நோட்டுகளை பிளாஸ்டிக் வடிவில் அச்சிடும் தி ட்டத்தின் சோதனை முயற்சியாக 10 ரூபாய் பிளாஸ்டி க் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடுகி றது.நாட்டில் கள்ள நோட்டுகள் பிரச்சினையை தவிர்க்க வும், கரன்சிகள் கிழியாமல் தடுக்கவும் பிளாஸ்டிக்ரூபா ய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ள து.இதன் முதற்கட்டமாக குறைந்த அளவில் 10 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு சோதனை நடத்த
ரிசர்வு வங்கி முடிவு செய்துள்ளது.10 ரூபாய் நோட்டுகளை அச்சிட்ட பின்பு இந்திய பருவ நி லை மாற்றங்களால் அதற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பரிசோதிக்கப்படும். பின்னர் மத்திய அரசின் அனுமதி பெற்று அதிகளவில் பிளாஸ்டிக் கரன்சி அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.


இதுபற்றி சண்டிகரில் ரிசர்வ் வங்கியின் கூடுதல் பொது மேலாளர் மங்களா கூறுகையில், பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் இப்போதுள்ள காகித நோட்டுகளை விட நீண்ட காலம் உழைக்கக் கூடியது.


அதிக வெப்பம், கடும் குளிர், கடலோர பகுதிகள் என பல பருவமுறைகள் கொண்ட நம் நாட்டில் முதற் கட்டமாக 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளின் தாக்குபிடிக்கும் தன்மை சோதனை செய்யப்படும்.


அது வெற்றிகரமாக அமைந்தால் அரசு அனுமதி பெற்று பிளாஸ்டிக் கரன்சி அச்சிட்டு வெளியிடப்படும். எனினும், அதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: