தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.1.12

கேரள ஆளுநர் பாருக் மரைக்காயர் மரணம்

இந்தியாவில் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வரும் கேரள மாநில கவர்னருமான பரூக் மரைக்காயர்(வயது 75 )நேற்று இரவு 9.20 மணியளவில் மரணமடைந்தார். கடந்த ஆண்டில் 2 மாத காலமாக உடல் நலக் குறைவினால் பா ருக் மரைக்காயர் அவதிப்பட்டு வந்தார். பின்னர் சிகிக்சைக் காக சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது.இந்திய
நேரப்படி இரவு 9.20 மணியளவில் பரூக் மரைக்காயர்(வயது 75)மரணமடைந்தார். இதனை தொடர்ந்து அவருது உடல் நேற்று இரவே புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டது.புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு இன்று காலை முதல் அரசியல் கட்சி தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.பரூக் மரைக்காயர் உடல் இன்று மாலை 4 மணிக்கு உப்பளம் முஸ்லீம் அடக்கஸ்தலத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது மறைவையொட்டி புதுவை மாநிலத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகை, சட்டசபை வளாகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
மறைந்த பரூக் மரைக்காயர் 1937-ம் ஆண்டு செப்டம்பர் 6ம் திகதி புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிறந்தவர். பள்ளி பருவத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர். படிக்கும் காலத்திலேயே அரசியலில் ஈடுபட்டவர். புதுச்சேரி மாநில முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளார். இளம் வயதிலேயே சபாநாயகர் பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர். முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அமைச்சரவையில் மத்திய சுற்றுலா மற்றும் விமானத்துறை அமைச்சராக இருந்தவர்.
3 முறை புதுவை நாடாளுமன்ற தொகுதியில் இருந்து உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டவர். சஊதி அரேபியாவுக்கான இந்திய தூதராகவும் பணியாற்றியவர். கடந்த 2010ம் ஆண்டு ஜார்கண்ட் கவர்னராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். தொடர்ந்து கடந்த செப்ரெம்பர் மாதம் முதல் கேரள ஆளுநராக பணியாற்றி வந்தார். பரூக் மரைக்காயர் தனது வாழ்நாளில் பெரும் பகுதி அரசின் உயர் பதவியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த பரூக் மரைக்காயருக்கு ஷாஜகான் என்ற மகனும், மல்லிகா, யாஸ்மின் என்ற மகள்களும் உள்ளனர். இதில் ஷாஜகான் புதுவை மாநில முன்னாள் அமைச்சர் ஆவார்.

0 கருத்துகள்: