தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.1.12

சிரியா கலவரங்கள் 384 சிறுவர்கள் படுகொலை

சிரியாவில் கலவரங்கள் ஆரம்பித்ததில் இருந்து இன்றுவரை மொத்தம் 384 பிள்ளைகள் அநியாயமாகக் கொலை செய்யப்பட் டுள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர், என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது. கடந்த தை 7ம் திக தி வரைக்கும் நடைபெற்ற படுகொலைகள் இவையாகும். மே லும் இறந்தவர்களில் பெருந்தொகையானவர்கள் ஆண் சிறுவ ர்களாகும். அத்தோடு சுமார் 380 சிறுவர்களுக்கு மேல் கைது செ ய்யப்பட்டுள்ளார்கள், இவர்கள் அனைவரும் 14 வயதுக்குகு றைந்தவர்களாகும். இன்று வெள்ளி
தொழுகை முடிந்த பின்னர் கோமா, கோம்ஸ் நகரங்களில் நடைபெற்ற ஆர்பாட்டங்களிலும் படுகொலைகள் நடைபெற்றுள்ளது. சர்வாதிகாரி பஸார் அல் ஆசாட்டின் கவசவாகனங்கள் பொது மக்களை படுகொலை செய்ய ஆரம்பிக்க ஐ.நாவின் பாதுகாப்பு சபை பூட்டிய அறையில் விவாதத்தை தொடங்கியது. சிரியாவுக்கு எதிரான பிரேரணைகளை அமல் செய்வது தொடர்பாக இவர்கள் தற்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள். சிரிய சர்வாதிகாரி ஆஸாட்டை உடனடியாக பதவி விலகும்படி ஐ.நா கோரவுள்ளது. சென்ற வாரம் உப அதிபரிடம் பதவியை ஒப்படைத்து வெளியேறும்படி ஆஸாட்டுக்கு அரபுலீக் வேண்டுதல் விடுத்திருந்தது. அதை அவர் குப்பையில் வீசிவிட்டார், இப்போது ஐ.நா களமிறங்கியுள்ளது. மேலும் இதுவரை நடந்த கலவரங்களில் மொத்தம் 5400 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆஸாட் உலக சமுதாயத்தை வெற்றி கொள்ள முடியும் என்று கருத முடியவில்லை. இன்று எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள சிரிய தூதராலயத்திற்குள் நுழைந்த 200 ஆர்பாட்டக்காரர் தூதராலய கதவுகளை உடைத்துக் கொண்டு நுழைய முற்பட்டனர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பு படைகளால் திருப்பியனுப்பப்பட்டனர்.

0 கருத்துகள்: