பாலசோர் (ஒடிசா), ஜன. 29- பெங்களூரை தலைமைய கமாக கொண்ட விமான மேம்பாட்டு வளர்ச்சி நிறுவ னத்தில் நவீனமாக வடிவமைக்கப்பட்ட ஆளில்லாத லக்ஷயா-2 என்ற விமானத்தின் 2-வது கட்ட சோதனை ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோரில் ஐ.டி.ஆர்வளா கத்தில் சண்டிப்பூர் கடல் பகுதியில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமை ந்ததாக விஞ்ஞானிகள்
அறிவித்து உள்ளனர்.இந்தியாவில் ஆளில்லாத விமானம் கடந்த 2000-ம் ஆண்டு சோதனைக்குட்படுத்தி இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த விமான எந்திரங்கள் நவீனமயமாக வடிவமைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வெற்றி காணப்பட்டு உள்ளது. இந்த விமானம் மூலம் எதிரிகளின் குறிப்பிட்ட இலக்கை சென்று ரகசியத்தை கண்காணித்து ராணுவத்துக்கு தகவல் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக