பிரான்சை தொடர்ந்து ஹோலன்டிலும் அமலுக்கு வருகி றது புதிய தடைச்சட்டம். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இஸ்லாமிய பெண்கள் முகத்தை மறைத்து பர்தா அணிவ து, தலையை முக்காடிட்டு மறைத்தபடி பொது இடங்களு க்கு வருவது படிப்படியாக தடைசெய்யப்பட்டு வருகிறது. இதில் ஓரங்கமாக பிரான்சை தொடர்ந்து, நேற்று ஹோல ன்ட் உள்நாட்டு அமைச்சகம் இந்த அறிவித்தலை வெளி யீடு செய்தது. அடுத்த
ஆண்டு முதல் பர்தா அணிய தடை செய்யும் சட்டம் பூரணமாக அமலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பொது இடங்களில் முகத்தை மறைத்தபடி செல்லுதல், ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க முடியாதபடி ஆடைகளை அணிந்து அதற்கு மதரீதியான விளக்கங்களை சொல்லுதல் போன்ற விடயங்களை ஏற்க முடியாதெனவும் தெரிவித்துள்ளது. மேலும் பிரான்சில் சிலுவை, சூலாயுதம் போன்ற மத சின்னங்களை பெரிதாக அணிந்து பாடசாலை போன்ற இடங்களுக்கு வரமுடியாது என்றும் சட்டச்சரத்து தெரிவிக்கிறது.
ஆண்டு முதல் பர்தா அணிய தடை செய்யும் சட்டம் பூரணமாக அமலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பொது இடங்களில் முகத்தை மறைத்தபடி செல்லுதல், ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க முடியாதபடி ஆடைகளை அணிந்து அதற்கு மதரீதியான விளக்கங்களை சொல்லுதல் போன்ற விடயங்களை ஏற்க முடியாதெனவும் தெரிவித்துள்ளது. மேலும் பிரான்சில் சிலுவை, சூலாயுதம் போன்ற மத சின்னங்களை பெரிதாக அணிந்து பாடசாலை போன்ற இடங்களுக்கு வரமுடியாது என்றும் சட்டச்சரத்து தெரிவிக்கிறது.
மேலும் நாம் மட்டும் எமது மத சின்னங்களை அணிந்து எம்மை புனிதர்கள் போல காட்டும் செயல் சிந்தனை ரீதியாக எங்கோ ஒரு குறைபாடுடையது என்ற கருத்தை ஐரோப்பாவில் பல அரசியல் கட்சிகள் அவ்வப்போது தெரிவித்தும் வந்துள்ளன. இஸ்லாமிய சட்டங்கள் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பல்வேறு மதவிவகாரங்களும் மெல்ல மெல்ல உலகத்தின் கவனத்தை தொட ஆரம்பித்துள்ளதையும் இத்தோடு சேர்த்து நோக்க வேண்டும். சென்ற மாதம் நோர்வேயில் இரண்டு இந்திய பிள்ளைகளை பறித்து பிள்ளைகள் கண்காணிப்பகத்தில் வைத்திருந்த செயல் இஸ்லாத்தைத் தொடர்ந்து இந்தியா மீதான உலக பார்வையை திசை திருப்பும் ஒரு புள்ளியாகவே தெரிகிறது. சிறீலங்காவில் முடிவடைந்துள்ள இனப்போர் இந்தியாவின் குறைபாடுகளை பார்ப்பதற்கு உலகைத் தூண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டுமென இந்திய அரசு நோர்வேயிடம் கண்டிப்பாக கூறியதாக சென்ற ஆண்டு வெளியான நோர்வேயின் அறிக்கை தெரிவித்திருந்தது. இதனுடைய உட்பொருள் இந்திய அரசின் ஆட்சி முறைக்கருத்து இந்துமத பார்ப்பானிய சிந்தனை மரபை அடியொற்றி உள்ளது. இது பாரபட்சமானது, உலக அரங்கில் ஏற்புடையதல்ல என்பதற்கு நோர்வேயின் அறிக்கை நல்லதோர் எடுத்துக்காட்டாகும். மேலும் பிள்ளைகள் பறிப்பு விவகாரத்தில் இந்தியா சினமடைந்தாலும், இந்தியாவின் குறைபாடுகள் உலக அரங்கில் விமர்சனத்திற்கு வரப்போகிறது என்பதற்கு இது முதலாவது அடிக்கல் என்பதை மறுக்க இயலாது.
அதேவேளை ஐரோப்பிய நாடுகளில் கிறீத்தவர் அல்லாத ஒருவர் ஆட்சித் தலைவராக இருக்க இயலாது என்ற விதி இருக்கிறது. இஸ்லாம், கிறீத்தவ, புத்தமதக் குறைபாடுகள் களையப்படும் சம காலத்திலேயே தம்மிடமுள்ள இந்த இமாலய தவறை மேலை நாடுகள் திருத்த வேண்டும். இல்லையேல் நாற்றமடிக்கும் தமது முதுகைப் பார்க்காமல் மற்றவரை திருத்த முயல்வது குற்றம் என்ற விமர்சனத்தை சந்திக்க நேரிடும். அனைவரும் மத ஆசாடபூதித் தனங்களை தவிர்த்து மனிதர்களாக மாற வேண்டிய போராட்டம் இந்த நூற்றாண்டின் முக்கிய போராட்டமாக அமையும். அதன் முடிவில் அனைத்து ஆலயங்களும், தேவாலயங்களும், மசூதிகளும், விகாரைகளும் அருங்காட்சியகங்களாக மாறும் என்ற இந்த நூற்றாண்டு மனித அறிவியல் வளர்ச்சிக் கருத்தும் அவதானிக்கப்பட வேண்டியது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக