தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.1.12

உலகின் இள வயது - மைக்ரோசாப்ட் சான்றிதழ் பெற்ற பாகிஸ்தான் சிறுமி மரணம்

உலகின் மிக இளம் வயது மைக்ரோசாப்ட் சான்றிதழ் பெற்ற 16 வயதுச் சிறுமி சனிக்கிழமை இரவு காலமா னார். பாகிஸ்தானைச் சேர்ந்த அர்பா கரீம் ரந்த்வா எ ன்ற அந்தப் பெண், மூளை பாதிக்கப்பட்டு ராணுவ ம ருத்துவமனையில் இருவாரங்களுக்கு முன்னர் சேர் க்கப்பட்டார். அவர், சனிக்கிழமை இரவு  மரணமடை ந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.இளம் வய தில் தகவல்
தொழில்நுட்பத்துறையில் சாதனை படைத்து, மைக்ரோசாப்ட்
நிறுவன விருது பெற்ற உலகின் இளம் வயது கணினிப் பொறியாளர் இவர். 2004-ம் ஆண்டில் எம்சிபி - மைக்ரோசாப்ட் ப்ரொபஷனல் சர்டிபிகேட்-டினை தனது 9வது வயதில் பெற்று சாதனை படைத்தார். பில்கேட்ஸ், இந்த சான்றிதழை இவருக்கு வழங்கி கெளரவித்தார். ராணுவ வீரரின் மகளான அர்ஃபா கரீம் ராந்தவாவுக்கு, இரு வாரங்களுக்கு முன்னர் திடீரென வலிப்பு ஏற்பட்டது. அதனால் லாகூர் ராணுவ மருத்துவமனையி்ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டார்.  உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு மூளை மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் குறைந்துகொண்டே வந்தன. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி சனிகிழமை பின்னிரவில் இறந்துவிட்டதாக  மருத்துவர்கள் தெரிவித்தனர்.பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோர் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்

0 கருத்துகள்: