தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.1.12

புதிய டைனோசர் சுவடுகள் கிழக்கு சீனாவில் அகழ்ந்தாய்வு

ஜப்பான் மற்றும் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சீ னா வின் கிழக்குப் பகுதி மாநிலமான ஷெஜியாங்கில் பறக்கு ம்வகை டைனோசர்களின் எலும்பு சுவடுகளை  அகழ்ந் தெடுக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 13 முதல் இந்த எலும் பு சுவடிகள் பற்றி தெரியவந்த போதும், நெ டுஞ்சாலை க ட்டமைப்பு பணிகளின் போது எதேச்சை யாக அப்பகுதியி லிருந்து தற்போதே கண்டுபிடித்துள் ளனர்.பூமியில் வாழ் ந்த இராட்சத ஊர்வன மற்றும் ப றப்பன விலங்குகளான டைனோசர்கள்
மனித வரலாற்றுக்கு மிகவும்
முற்பட்ட காலத்திலேயே முற்றாக அழிந்து போயின. இதில் இடுப்பு எலும்பை உடைய இந்தவகை பறக்கும் டைனோசர்கள் 100 மில்லியன் வருடங்களுக்கு முன் நிலவிய க்ரெடாஷெயஸ் யுகத்தில் வாழ்ந்த ஒர்னிதிஸ்ஸியன்ஸ் வகையைச் சேர்ந்தவை எனக் கூறப்படுகின்றது.

விஞ்ஞானிகள் 13 வருடங்களாக நன்கு பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப் பட்ட இவ்வகை டைனோசரின் எலும்புக்கூட்டை நன்கு ஆராய்ந்து இவற்றின் வாழ்க்கை முறைகளை பொது மக்களுக்கு கூறி வருகின்றனர். ஷெஜியாங்கில் உள்ள சர்வதேச வரலாற்று ஆய்வியல் அருங்காட்சியகத்தை சேர்ந்த புவியியல் விஞ்ஞானி ஷெங் வெஞ்சியே கருத்து உரைக்கையில் புதிதாக சேகரிக்கப்பட்ட டைனோசரின் எலும்பு எச்சங்கள் டியான்டையில் கண்டு பிடிக்கப் பட்டதனால் இவை யுயேசுரஸ் டியான்டைன்சிஸ் எனப் பெயரிடப் பட்டதாக கூறினார்.

க்ரெடாஷெயஸ் யுகத்தின் போது பரிணாமமடைந்த நெருப்புக் கோழி போல் ஓடக் கூடிய இப்பறவை இனம் ஏனைய ராட்சத ஊரும் டைனோசர்களுக்கு இணையான எண்ணிக்கையில் இந்த யுகத்தை ஆட்சி செய்து வந்தன என்று ஜப்பானைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள் கருதியுள்ளனர்.

புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட எலும்பு எச்சங்கள் ஒர்னிதோபொட்ஸ் எனும் ஒர்னிதிஸ்ஸியன் இன பறவையினுடையது. இவை பருமனில் மிகவும் சிறியனவாகவும் வேகமாக ஓடக் கூடிய வல்லமை உடையனவாகவும் காணப்பட்டன. எனினும் பருமனில் மிக அதிகமான இராட்சத விலங்குண்ணி டைனோசர்களிடமிருந்து தம்மை தற்காத்துக் கொள்ள மிக வேகமாக ஓடக்கூடிய திறமை உடையனவாகவும் விளங்கிய இவ்வுயிரினம் அக்காலத்தில் வெற்றிகரமான இனமாகும் என்று ஷெங்க் கூறுகிறார். 1.5 மீற்றர் மட்டுமே உயரமுடைய இந்த இனமே சீனாவில் கண்டு பிடிக்கப்பட்ட மிகச் சிறிய டைனோசர் இனமாகும். ஆரம்பத்தில் இவை வட அமெரிக்காவில் மட்டுமே அதிகமாகவும் ஆசியாவில் சொற்பமாகவும் வாழ்ந்து வந்ததாக கருதப்பட்டிருந்தது.

தற்போது வட கிழக்கு சீனாவைச் சேர்ந்த லியானிங்,ஜிலின் மாகாணங்களிலும் கொரிய குடியரசு மொங்கோலியா ஆகிய நாடுகளிலும் யுயேசுரஸ் பறவையின் எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ளன.

நவீன ஆராய்ச்சியின் படி இப்பறவை இனம் நிலத்துக்கடியில் துவாரமிட்டு வசித்து வந்ததாக கூறப்படுகின்றது. தற்போது விஞ்ஞானிகள் பரந்த சமவெளிகளில் டைனோசரின் எலும்பு சுவடு மட்டுமின்றி அதன் முட்டை சுவடுகளையும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

இதே மாநிலத்தில் இதற்கு முன்னர் 4 டைனோசர் இனங்களின் சுவடுகள் அதாவது ஹெர்பிவொரஸ் இனத்தில் மூன்றும் கார்னிவொரொஸ் இனத்தில் ஒன்றுமாக அகழ்ந்த்தெடுக்கப்பட்டு ஷெஜியாங் மாகாணத்தின் தலைநகரமான ஹங்சோவிலுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன.

0 கருத்துகள்: