கடந்த 2001ம் ஆண்டு ஆப்கான் போருக்கு படைக ளை கொண்டு சென்ற டென்மார்க் இதுவரை செல விட்ட தொகை 13 பில்லியன் குறோணர்களாகும். டேனிஸ் படைத்துறை அமைச்சும், வெளிநாட்டு அ மைச்சகமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக் கை மேற்கண்ட தகவலை தருகிறது. இவ்வளவு கட்டு மீறிய தொகையை
கொட்டியிறைத்தது அதிகம், அதேவேளை செலவிட்ட தொகைக்கு கிடைத்த வெற்றியோ பெரிதாக எதுவும் இல்லை என்று டேனிஸ் படைத்துறை ஆய்வாளர் பேராசிரியர் மிக்கேல் வல்புய் ராஸ்முசன் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது ஆப்கானில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதாகப் புறப்பட்டு இதுவரை அதை எட்டித் தொடவில்லை, இருப்பினும் கத்தாரில் ஒரு தலைமைக் காரியாலயத்தை அமைத்து, பேச்சுக்களை நடாத்த தாலிபான்கள் இணங்கியிருப்பது ஒன்று மட்டுமே முக்கியமான முன்னேற்றம் என்றும் தெரிவித்தார்.இந்தப் போரின் பிரதான முடிச்சுக்கள் பாகிஸ்தான் முதல் கொண்டு ஈரான், ரஸ்யா, சீனாவரை காணப்படுகின்றன. இத்தனை கோடிகளை கொட்டி இறைத்தும் தாலிபான்களை அடக்க முடியவில்லை என்றால் அதன் குறைபாடு எங்கோ கண்ணுக்கு தெரியாத இடத்தில் மறைந்திருக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. மேலும் கடந்த பத்தாண்டுகளாக நடைபெறும் போர் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பாரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கொண்டு சன்னதமாக போர்புரிய பொருளாதாரம் இடம் தரவில்லை.
இதற்கு நல்ல உதாரணம் இஸ்ரேலும் – அமெரிக்காவும் இணைந்து நடாத்தவிருந்த படைத்துறை பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளதைக் கூறலாம். சற்று முன்னர் முழங்கிய இஸ்ரேலிய வானொலி பொருளாதார பற்றாக்குறையால் இந்த ஏவுகணைப் பயிற்சி இடை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்குள் பணத்தைத் தேடிக்கொண்டு இதை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறியிருக்கிறது. இஸ்ரேலுக்குள் ஈரானிய அணு குண்டு ஏவுகணைகள் வந்து விழுந்தால் அதை எப்படி தடுப்பதென இந்த பயிற்சியால் இஸ்ரேல் கற்றுக் கொள்ளும். ஆனால் இதற்கான ஏவுகணை செலவுகள் நினைத்தாலே நடுக்கத்தை ஏற்படுத்தும். இன்று அரிசிக்கும், பாணுக்கும் அல்லாடும் உலகில் இந்த மடைத்தனங்கள் தேவையா என்பது முக்கிய கேள்வியாகியுள்ளது. கடைசியில் இறந்த தாலிபான்களின் உடல்களில் சிறு நீர் கழிக்குமளவுக்கு அமெரிக்க இராணுவத்தின் இயலாமை போயுள்ளது. 13 பில்லியனை செலவழித்து மூத்திரம் பேய்ந்ததை விட கண்ட மிச்சம் எதுவும் இல்லையோ..? எல்லாபுகழும் இரைவன் ஒருவனுக்கே சத்தியம் வென்றே தீரும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக